ADVERTISEMENT
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விலை வரலாறு காணாத வகையில் கடுமையாக உயர்ந்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டின் ரூபாய் மதிப்பு கடந்த மாதம் முன் எப்போதும் இல்லாத வகையில் 7 சதவீதம் குறைந்தது. இது மேலும் கடும் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நிதியம் மற்றும் நட்பு நாடுகளிடம் இருந்து கடனுதவி கேட்டு, பாக்., கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமையல் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றின் விலையை வரலாறு காணாத வகையில் அந்நாட்டு அரசு நேற்று முதல் உயர்த்தியது. ஒரு லிட்டர் நெய்யின் விலை 208 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது லிட்டர் 605 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் சமையல் எண்ணெயின் விலை 213 ரூபாய் உயர்த்தப்பட்டு, 555 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நிலைமை இப்படியே போனால், இலங்கையை போல் பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வாசகர் கருத்து (36)
பாக்கிஸ்தான பாத்து இளிச்சிச்சாம் புதூ இந்தியா
புதூ இந்தியாக்கு ரெண்ண்டு பங்காளிங்க
இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட நாடுகளின் நிலைமை இப்படித்தான் இருக்கும்.
இலங்கையில் நிலைமை இப்படியே சென்றால், கூடிய சீக்கிரம் அங்கு மக்கள் உன்ன உணவு இல்லாமல் பட்டினியால் வாடி இறக்க அதிக நாட்கள் ஆகாது. புதியதாக பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் இந்த நேரத்தில் மிகவும் பொறுப்பாக பணியாற்றவேண்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மற்றவர்களை அழிக்க நினைக்கும் அனைவர்க்கும் இது பாடம் தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்து கொடுத்து நாட்டை கெடுத்து விட்டார்கள்