ADVERTISEMENT
சென்னை:டெல்டா மாவட்ட ஆய்விற்கு முதல்வர் அழைத்து செல்லாததால், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அதிருப்தி அடைந்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி பருவம் துவங்கியுள்ளது. இதற்காக, மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே பாசன தேவைக்கு நீர் திறக்கப்பட்டு உள்ளது.இதை பயன்படுத்தி, நெல் உற்பத்தியை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாக, கடைமடை பகுதிகளுக்கு உரிய நேரத்தில் நீர் சென்று சேருவதற்காக, டெல்டா மாவட்ட நீர்வழித்தடங்களை துார் வார, 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியில் 4,900 கி.மீ., நீர்வழித்தடங்களை துார் வாரும் பணிகள் ஏப்ரலில் துவங்கின; இன்னும் பணிகள் முடியவில்லை.ஆனால், பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள தாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார்.நீர்வளத் துறை உயர் அதிகாரிகள், முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் அனுப்பினர்.
துார் வாரும் பணிகள் முடியாததால், டெல்டா விவசாயிகள் அதிருப்தியில் இருப்பதாக, திருச்சி மாவட்ட அமைச்சர்கள், முதல்வர் ஸ்டாலினிடம் முறையிட்டனர்.இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் திடீரென முதல்வர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு ஆகியோர் உடன் சென்றனர்.
ஆனால், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனை, முதல்வர் அழைத்து செல்லவில்லை. தன் துறை தொடர்பான ஆய்வின்போது, முதல்வர் தன்னை அழைத்து செல்லாததால், துரைமுருகன் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா மட்டுமே, ஆய்வின் போது, முதல்வருடன் இருந்தார்.இதனிடையே, டெல்டா மாவட்ட துார் வாரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து, நீர்வளத் துறை அதிகாரிகள், முதல்வரின் செயலரை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.

வாசகர் கருத்து (27)
இப்போ லேப்ட்டு ரைட்டு சற்றயிட்டு எல்லாம் தங்கம் தென்னரசுதான் .
விட்டுவிட்டு போயிருச்சே...
எப்படியோ அடிச்சிக்கிட்டு ஒழிந்தால் சரி.....
வாய்த்துடுக்கு துரைமுருகன் சுடாலினை மண்ணுமூட்டை என்று சொன்னது கவனத்திற்கு சென்றதாகவும் உண்மை வெளிப்பட்ட ஆத்திரத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அவரையே யாரோ அழைத்து செல்கிறார்கள். அவர் செல்கிறார். இழுதிக் கொடுத்ததை மைக்கின் முன் படிக்கிறார். அதில் அவர் எங்கே இவரை அழைத்துச் செல்வது? மண்மூட்டை வதந்தி வேறு பரவுகிறது.