ADVERTISEMENT
வேலூர்: பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சி காணொளியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தபோது, ‛பிரதமர் பேசும் ஹிந்தி நமக்கு புரியாது, அதனால் மியூட் செய்துவிடலாம்' என திமுக எம்.பி., கதிர் ஆனந்த் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி, இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற ஏழைகள் நல மாநாட்டில் நேற்று (மே 31) பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்திலும் காணொளி வாயிலாக இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே நேரத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் லோக்சபா தொகுதி திமுக எம்.பி., கதிர் ஆனந்த், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அக்கூட்டத்தில் பெரிய திரையில் பிரதமர் மோடி பேசும் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்போது திமுக எம்.பி., கதிர் ஆனந்த், ‛பிரதமர் இமாச்சல பிரதேசத்தில் இருந்து பேசிக்கொண்டு இருக்கிறார். நாம் அதனை அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் பேசும் ஹிந்தி நமக்குப் புரியாது. அதனால், அதனை மியூட் செய்துவிடலாம்' எனக் கூறி ஆடியோவை கட் செய்யக் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து (21)
தொடர்ந்த பொய் செய்திகளால்😏 மக்கள் வெறுப்புற்று? ஒரு காலத்துல ஏகபோக முதலிடத்தில் இருந்த KD களின் செய்தி சானல் ஐந்தாவது இடத்துக்கு😪 தள்ளப்பட்டுள்ளது. கலைஞர் டிவி யை உ.பி ஸ கூட நம்புவதில்லை.
அடடா நாங்கள் தமிழக மக்கள் உங்கள் திமுக ஊடகங்களை MUTE செய்து நிறைய மாதங்களே ஆகிவிட்டன.இது எப்படியிருக்கு.இது உண்மைய்யா. ஸ்டாலின் ஷுட்டிங்கை எல்லாம் உங்கள் அடிமை ஊடகங்களில் போட்டு நீங்க மட்டுமே கை தட்டிக்கோங்கயா,, எங்களுக்கு அந்தக் காமெடியெல்லாம் ரொம்ப போர் அடித்து விட்டது.நம்ம லெஜன்ட் சரவனன் அண்ணாச்சிக்கே டஃப் கொடுக்கிறது உங்க ஸ்டாலின் தானுங்களே
இது பிரதமரை அவ மதிப்பதாகும். தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவனெல்லாம் ஒரு ஆளுன்னு எம்பி பதவி கொடுத்த தமிழக மக்களை செருப்பால அடிக்க வேண்டும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அவர் சொன்னது ,யதார்த்தமான விஷயம். அவருக்கு இந்தி புரியாது. இதை அரசியல் செய்யவேண்டாம். எல்லா நிகழ்ச்சியையும் எல்லோரும் எப்பவும் பார்க்கணுமுன்னு சொல்ல முடியாது.