Load Image
dinamalar telegram
Advertisement

வேளாண் பல்கலை அறிவித்த விருது: ஏற்க மறுத்த தலைமை செயலர்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: 'மேன்மைமிகு முன்னாள் மாணவர் விருது' தனக்கு அளிப்பதை தவிர்க்கும்படி, வேளாண் பல்கலைகழக துணைவேந்தருக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.


இதுகுறித்து வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: வேளாண் பல்கலை 'மேன்மைமிகு முன்னாள் மாணவர்கள்' விருதை எனக்கு வழங்கவிருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். எனது கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மற்ற மாணவர்களுக்கு மேலும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விருப்பம் கொள்கிறேன். எனவே, நான் இப்போதைய நிலையில் இருந்து கொண்டு தாங்கள் அளிக்கும் விருதைப் பெறுவது என்பது பதவிக்கான மரபுசார்ந்த நிலைகளை கடந்ததாகி விடும்.
Latest Tamil News

எனவே, விருதை எனக்கு அளிப்பதை தவிர்க்கும்படி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் இறையன்பு கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (16)

 • அப்புசாமி -

  அப்பப்போ அதிகாரிகளை டிரான்ஸ்பர் செஞ்சதைத் தவிர வேற எதையும் செய்யலை. அதுக்கே விருதா?

 • Kannan rajagopalan - Chennai,இந்தியா

  நல்ல நாடகம் . இமேஜ் பில்டிங் ? அடுத்து அரசியலில் இறங்கினாலும் ஆச்சரியம் இல்லை.

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  இவர் மனிதருள் மாணிக்கம்டா. இதே இப்போதுள்ள மந்திரிகள் முதல்வர் முதற் கொண்டு விருதுகளை விலை கொடுத்து வாங்கி தங்களை தங்கள் பெருமை படுத்தி கொள்வார்கள். இதன் செலவும் மக்கள் செலவு தான்.

 • Bala - chennai,இந்தியா

  திரு இறையன்பு அவர்கள் மிகச்சிறந்த ஆன்மீகவாதி. ஒரு தேசியவாதியும் கூட. சிறந்த சொற்பொழிவாளர்.சிந்தனையாளர். பல நல்ல பண்புகளை உடையவர். அவருக்கு எந்த ஒரு விருது கொடுத்தாலும் தகும். நான் அவருடைய பல சொற்பொழிவுகளை பொதிகை தொலைக்காட்சியில் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு சொற்பொழிவு மூலமாக நல்ல செய்திகளை சொல்வார். குறிப்பாக மாணவர்களுக்கு. ஆனால் தன்னுடைய பதவியில் ஒரு தடுமாற்றம் அவருக்கு ஏற்படுகிறதோ என்று நினைக்கிறேன். தன்னுடைய கடமையை ஆற்றுவதில் அரசுடன் சமரசம் செய்துகொள்கிறாரோ என்று அஞ்சுகிறேன். ஒரு அரசின் போலீஸ் அத்துமீறல்களை அதில் உள்ள கண்ணுக்கு தெரிந்த நியாய அநியாயங்களை மாவட்ட ஆட்சியாளர்கள் மூலமாக தட்டிக்கேட்கும் உரிமை நிச்சயமாக தலைமைச்செயலருக்கு உண்டு. சேதப்படுத்தப்பட்ட ஒரு பழமை வாய்ந்த ப்ரசித்தியான மதுரகாளி அம்மன் கோவிலை புனரமைக்கும் முயற்சியில் உண்மையாக தன்னலமின்றி ஈடுபட்ட திரு கார்த்திக் கோபிநாத் அவர்களின் சிறைவாசம் நிகழ்வு தமிழக மக்களுக்கு தரும் செய்தி என்ன? தமிழகத்தின் ஆன்மாவான திருக்கோவிலுக்காக உண்மையாக உழைக்கும் மக்களுக்கு இந்த கைதின் மூலமாக தமிழக அரசு உணர்த்துவது என்ன? மக்கள் யாரும் இந்து கோவில்களை தாமாக வந்து புனருத்தாரணம் செய்ய முன்வரக்கூடாது என்பதா? கண்ணை மூடிக்கொண்டு எனக்கென்ன என்று இருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறதா? திரு இறையன்பு அவர்களே நம் தமிழ்நாட்டில் தாங்கள் தலைமை செயலராக இருக்கும்போது இப்படிப்பட்ட அநியாயங்கள் நடப்பது, அதை நீங்கள் தட்டிக்கேட்காமல் இருப்பது நிச்சயமாக உங்கள் பொறுப்புக்கு அழகல்ல. நீங்கள் தலைமை செயலராக இருக்கும் அரசில் இது ஒரு கரும்புள்ளி. மீண்டும் சட்டம் தலையிட்டு போலீஸ் துறைக்கு குட்டுவைத்த பிறகுதான் அவருக்கு விடுதலையா? இது உங்களுக்கும் ஒரு அவமானம் இல்லையா. நீங்கள் தலையிட்டு நியாய அநியாயங்களை கண்டறிந்து செயல்பட வேண்டாமா? வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

 • ராஜா -

  மனசாட்சி உருதியிருக்கும் அதான் வேண்டாம் என்று சொல்லியிருப்பார். அவருக்கு கடந்த ஒரு வருட ஆட்சியில் தமிழக மக்கள் கொடுத்த விருதை வாழ்நாளில் மறக்க மாட்டார். சேராத இடம் சேர்ந்தால்...

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்