Load Image
dinamalar telegram
Advertisement

பான் - இந்தியா சினிமாவுக்கு அன்றே பாதை போட்ட தமிழ் படங்கள்

Tamil News
ADVERTISEMENT
இந்திய சினிமா என்பது ஒருங்கிணைந்த சினிமாவாக இன்னும் மாறவில்லை. பல மொழி பேசும் மாநிலங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியாவில் ஹிந்தி சினிமாதான் இந்திய சினிமா என்று உலக அளவில் பலரும் நினைத்திருந்தார்கள். இந்தியாவில் ஹிந்தி சினிமா மட்டுமில்லை மற்ற மொழி சினிமாக்களும் இருக்கிறது என பலரும் கடந்த பல வருடங்களாக உணர்த்தி வருகிறார்கள். ஆனாலும், பெரும்பாலானோருக்கு ஹிந்தி சினிமாவே பிரதானமாக இருந்தது. அந்த மாயத் தோற்றத்தை 'பாகுபலி' படம் வெகுவாக உடைத்தது.

Latest Tamil News

ஆனால், 'பாகுபலி' படங்களும் அதற்குப் பிறகு சமீபத்தில் வெளிவந்த சில தெலுங்குப் படங்களும், ஒரே ஒரு கன்னடப் படமும்தான் இந்த பான்--இந்தியா வாசகத்தை அதிகம் பேச வைத்தன. அதே சமயம், அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக பல வருடங்களுக்கு முன்பே பான்--இந்தியா என்பதை உருவாக்கியது தமிழ் சினிமாதான். என்ன ஒன்று, அப்போது இந்த பான்--இந்தியா வார்த்தை என்பது புழக்கத்தில் இல்லை. இப்போது அந்த ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்துவிட்டு தெலுங்கு, கன்னட சினிமா உலகினர் தாங்கள்தான் புதிதாக சாதித்தது போல பேசி வருகிறார்கள்.

அந்தக்கால தமிழ் பிரம்மாண்டம்தமிழ் சினிமா அந்தக் காலத்திலேயே மற்ற மொழிகளிலும் பிரபலமாக இருந்தது. இங்கு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகி வெளியாகி அங்கும் நல்ல வசூலைப் பெற்றன. அவற்றில் முதன்மையானது 1948ல் ஜெமினி ஸ்டுடியோஸ் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் வெளிவந்த சந்திரலேகா படம். அந்தக்கால தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு பிரம்மாண்டத்தை காட்டிய இந்த படம் இந்தியாவின் பல மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதன்பிறகு எம்ஜிஆர், சிவாஜி கால கட்டங்களில் கூட பல தமிழ்ப் படங்கள் மற்ற மொழிகளுக்குச் சென்றிருக்கின்றன.

Latest Tamil News

கமல்ஹாசன்அதன்பிறகு 90களில் வெளியான பிரபு, குஷ்பு நடித்த 'சின்னத்தம்பி' படம் இந்தியாவில் பல மொழிகளில் பட்டையை கிளப்பியது. இன்று பான்-இந்தியா படங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன்பே பான்-இந்தியா நடிகராக தன்னை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றவர் கமல்ஹாசன்.

Latest Tamil News

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் நடித்தவர் கமல்ஹாசன். அவரது படங்கள் மற்ற மொழிகளில் என்னென்ன சாதனைகளைப் படைத்திருக்கிறது என்பதை இன்றைய சினிமா ரசிகர்கள் தேடிப் பார்க்க வேண்டும். கமல்ஹாசனின் 'அபூர்வ சகோதரர்கள்', 'குருதிப்புனல்', 'ஹேராம்', 'பஞ்சதந்திரம்', 'தசாவதாரம்' ஆகிய படங்கள் இன்றைய காலத்தில் வெளிவந்திருந்தால் 1000 கோடி வசூலை அட்டகாசமாக வசூலித்திருக்கும்.

Latest Tamil News

ரஜினிக்கு முக்கிய பங்குபான்--இந்தியா என்ன, பான்--உலகத்திற்கே தென்னிந்திய சினிமாவைக் கொண்டு சென்றதில் முதன்மைப் பங்கு நடிகர் ரஜினிகாந்திற்கே. அவரது படங்கள்தான் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்திய சினிமாவிற்கே பான்--உலகத்தை அறிமுகம் செய்து வைத்தன. ரஜினியின் 'சிவாஜி' படம் போட்ட அந்த பான் உலகப் பாதைதான் இன்று தெலுங்கு, கன்னட, மலையாளப் படங்களும் நல்லதொரு வழிகாட்டியாக இருக்கின்றன.

Latest Tamil News

தென்னிந்திய கலைஞர்கள்நடிப்பைத் தாண்டி தென்னிந்திய சினிமாக்களுக்கான ஒரு அடையாளத்தை கடந்த 30 வருடங்களில் இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் ஆகியோர் அவரவர் படங்கள் மூலம் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். அவர்களும் போட்ட பாதையில் தான் இன்றைய தென்னிந்திய சினிமா தங்கு தடையில்லாமல் உலகம் முழுவதும் செல்ல முடிகிறது.

ஆக, தமிழ் சினிமாவின் இந்த ஜாம்பவான்களுக்குத்தான் ராஜமவுலிக்களும், பிரபாஸ், யஷ்களும் நன்றி சொல்ல வேண்டும்.வாசகர் கருத்து (5)

 • Sri - Ghisin,கோஸ்டாரிகா

  தமிழகத்தில் அனைத்துமே ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ராஜாவின் பார்வை பட்டால் தான் முன்னேற்றம்..இல்லையெனில் ஜீரோ தான். டிவி சன் டிவி ஆதிக்கம் மிக பெரிய உச்சம். ஆகையால் இங்கு ஆண்டான் அடிமைதான் சினிமா சீரியல் உலகங்கள்

 • தமிழன் - madurai,இந்தியா

  இன்று தமிழ சினிமாவில் ஜாதி அரசியலும், மத அரசியலும் தான் இருக்கு.

 • R S BALA - CHENNAI,இந்தியா

  வேற வழி இப்படியெல்லாம் எழுதி நாம பெருமைப்பட்டுக்க வேண்டியதுதான்.. இன்றைய தமிழ் சினிமாவில் இயக்குனர்களை தவிர, முன்னாள் போல' ஒரு கவிஞரோ வசனகர்த்தவோ இசைஅமைப்பாளரோ கதாசிரியரோ இல்லாத ஒரு பஞ்சம் நிலவுகிறதே.. இதன் காரணமே தமிழறிவு ஒழுங்காக இல்லாததுதான் தற்போது மேல்குறிப்பிட்ட அனைத்தும் ஆங்கில கலப்பிலேயே 90 சதவிகிதம் உள்ளது இது மிக வேதனையான நிலைமை ..

 • V MADHAVAN - BANGALORE,இந்தியா

  மணிரத்தினத்தின் 'ரோஜா' மற்றும் 'நாயகன்' படம் மற்றும் 'மூன்றாம்பிறை' வட இந்தியர்களை தென்னகத்தை நோக்கி திரும்பிப்பார்க்கவைத்தது . நிச்சயம் ஷங்கரின் 'எந்திரன்' படம் தான் நம்மாளும் கிராபிக் படங்கள் அகிலஉலக தரத்தில் எடுக்கமுடியும் என்று நிரூபித்தது ,ரெஹ்மான் அவர்கள் இசைஅமைப்பின் தரத்தை மிகவுயர்ந்த தரத்திற்கு கொண்டு சென்று ஆஸ்கார் விருதும் பெற்றார். இதைக்கூறி தமிழ் திரைப்பட உலகினர் மார்தட்டிக்கொள்வதில்லை.நாம்தான் சென்னையில் இருந்த ஸ்டுடியோக்களை மூடிவிட்டு ஹைதராபாத்தில் படம் எடுத்து தமிழ் நாட்டில் வெளியிடுபவர்களாயிற்றே. ஆனால் கர்நாடகாவில் கடந்த முப்பது வருடங்களாக கன்னடத்தில் டப்பிங் படங்களை வெளியிட அனுமதித்ததேயில்லை. அவர்கள் இப்போது கேகேஎப் ஐ ஹிந்தியில் டப் பண்ணி பான் இந்தியா படம் என்று பெருமைப்படுகிறார்கள்.

 • rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்

  இப்படி பேசி பேசி நாம் திருப்தி அடையவேண்டியதுதான்.தமிழ் பழமையான மொழி என்று சொல்லிகொண்டு நாமும் தமிழ் படிக்காமல் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்காமல் (தமிழ்நாட்டில் உள்ள பாதி புதிய தலைமுறைக்கு தமிழ் பேச தெரிந்தாலும் எழுத படிக்க தெரியாது) விட்டதுதான் மிச்சம்.மொழியை வளர்க்க நாமும் மற்ற மொழிகளை கற்று அங்கு உள்ளவர்களிடம் தமிழை கற்றுக்கொடுக்க வேண்டும், இல்லாமல் இருந்தால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டியதுதான்,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்