Load Image
Advertisement

நவீன ரயில் நிலையம் ரூ.350 கோடியில் திருப்பதியில் அமைகிறது

  நவீன ரயில் நிலையம்  ரூ.350 கோடியில் திருப்பதியில் அமைகிறது
ADVERTISEMENT
சென்னை :சர்வதேச வசதிகளுடன், 350 கோடி ரூபாயில் அமைய உள்ள திருப்பதி ரயில் நிலையத்தின் மாதிரி புகைப்படத்தை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று வெளியிட்டார்.
இந்திய ரயில்வே தனியார் பங்களிப்போடு, 53 ரயில் நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 14 ரயில் நிலையங்களை, 5,000 கோடி ரூபாயில் மேம்படுத்த உள்ளது. இதில், சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், திருப்பதி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களும் அடங்கும்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றான, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தை, 350 கோடி ரூபாயில், மூன்று மாடிகளுடன், சர்வதேச வசதிகளுடன் தரம் உயர்த்தும் வகையில், கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Latest Tamil News
இந்த நிலையத்தில், 23 லிப்ட், 20 எஸ்கலேட்டர், 150க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி' கேமிரா, காத்திருப்பு அறைகள், உணவகங்கள், ஓய்வு அறைகள், பூங்கா, வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக அமைய உள்ளது.இதற்கான மாதிரி போட்டோக்களை, அஸ்வினி வைஷ்ணவ் தன் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.சர்வதேச தரத்துடன் அமையவுள்ள திருப்பதி ரயில் நிலைய பணிகளுக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இதை வரவேற்று பலரும், விமர்சித்து சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து (4)

  • raj82 - chennai,இந்தியா

    rama rajiyam

  • THANGARAJ - CHENNAI,இந்தியா

    நாட்டில் ஒருசில ரயில்வே இடங்கள் மட்டும் அதிக வசதிகள் தேவை அற்றது. ஒரு ரயில்வே கோட்டத்தில் அடிப்படை வசதிகள் அனைத்து ரயில்வே நிலையங்களுக்கும் இருக்க வேண்டும், பராமரிக்க வேண்டும். அதிக வசதிகள் ஊழலுக்கு தான் வசதியாக இருக்கும்.

  • தமிழ்மணி. கோவன்புத்தூர். - ,

    ஏலுமலையப்பன் திருவடிகளே சரணம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement