Load Image
dinamalar telegram
Advertisement

இன்று முதல் டில்லியில் உங்கள் தினமலர்!

Tamil News
ADVERTISEMENT
கடந்த 71 ஆண்டுகளாக தமிழக மக்களின் நாடித் துடிப்பாக விளங்கி வரும் தேசிய தமிழ் நாளிதழான, 'தினமலர்' இன்று முதல், தலைநகர் டில்லியிலும் கிடைக்கும்.நாட்டின் வளர்ச்சிக்கு, ஒரு நாளிதழின் எழுத்து காரணமான வரலாறே, 'தினமலர்' நாளிதழின் வரலாறு. 1951ல் துவங்கி இந்த, 71 ஆண்டுகளில், நாட்டு நலனுக்காக, மக்கள் பணிக்காக, 'தினமலர்' சிந்தித்ததும்,
சாதித்ததும் பல. சந்தித்த தடைகற்களை வாசகர்கள் துணையோடு வென்றும் வந்திருக்கிறது.


Latest Tamil News
வெறுமனே தகவல்கள், நிகழ்வுகளை மட்டும் தராமல், மக்களின் தேவைகளுக்காக, குறைகளுக்கு தீர்வு காண்பதற்கான செய்திகளை தந்து, மக்கள் நாளிதழாக 'தினமலர்' விளங்கி வருகிறது.தமிழ் பத்திரிகை உலகில் நவீன 'ஆப்செட்' அச்சு முறையில் வெளிவந்த முதல் நாளிதழ், தினமலர் தான். தமிழ் பத்திரிகை உலகில் வாரமலர், சிறுவர் மலர், ஆன்மிக மலர், மாணவர் பதிப்பான 'பட்டம்' நாளிதழ் என பல்வேறு புதுமைகளை புகுத்தி, மக்களின் நாடித் துடிப்பாக விளங்கி வருகிறது.


சென்னை, வேலுார், புதுச்சேரி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் என, 10 பதிப்புகளாக வெளி வருவதோடு, 'தினமலர்' சென்னை பதிப்பு தற்போது பெங்களூரில் கிடைப்பது, நீங்கள் அறிந்ததே. வாசகர் உணர்வுடன், எப்போதும் பின்னிப் பிணைந்து, அவர்களின் நலன் காக்கும் பழக்கம் கொண்ட 'தினமலர்' நாளிதழ், இன்று முதல், தலைநகர் டில்லியிலும், காலை 5:00 மணி முதல், உங்கள் கைகளில் தவழும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

- ஆசிரியர்.


வாசகர் கருத்து (24)

  • V Ragavan R Jeevesh -

    0........

  • niraan -

    Im really happy,,,,congratulations....

  • r ravichandran - chennai,இந்தியா

    மேன் மேலும் அனைத்து மாநிலங்களிலும் தினமலர் வெளி வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • AbiAravindh Trichy. -

    தேசிய நாளிதழுக்கு நல்வாழ்த்துகள்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    வாழ்த்துக்கள் வடஇந்தியாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் தினமலர் சேவை தொடரட்டும் .இப்போது அவுட் சொர் சிங் முறையில் தான் பெரிய நாளிதழ்கள் எல்லா இடங்களிலும் தங்கல் பாதிப்புகளை வெளியிடுகின்றனர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்