ADVERTISEMENT
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் கல்லூரி விழாவில் பாடிக்கொண்டிருந்த போது பிரபல பாடகர் கே.கே. காலமானார்.
பிரபல பின்னணி பாடகர் கே.கே.,என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னாத் 53 . டில்லியைச் சேர்ந்த இவர் , தமிழ், தெலுங்கு, ஹிந்தி கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார்.
தமிழில் இவரது பாடல்கள் தமிழக ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் வெளிவரவுள்ள லெஜண்ட் திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.

இவருக்கு இந்தியா முழுதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடி கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கோல்கட்டா சி.எம்.ஆர்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கே.கே. மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமிதஷா, காங்., எம்.பி., ராகுல் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வழக்குப்பதிவு
இதனிடையே, கோல்கட்டாவின் நியூமார்க்கெட் போலீஸ் ஸ்டேசனில், பாடகர் கேகே மரணம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடும்பத்தினரின் ஒப்புதலை பெற்ற பின்னர், அவர் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தவும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். கோல்கட்டாவில் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாசகர் கருத்து (3)
RIP. DEEPEST CONDOLENCES. OM SHANTHI.
என்ன வசீகரிக்கும் குரல்....நம் சிந்தனை ஓட்டத்தை பரவச நிலைக்கு எடுத்து செல்லும் இனிமையான வாய்ஸ்....அதற்கு மேட்ச் ஆன இசை, இணையான அழகு பெண் குரல்கள்....தமிழ் சினிமா பாடல் இசையை மற்றுமொரு உச்சநிலைக்கு எடுத்து சென்றார் கே.கே....HEARTFELT CONDOLENCES..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
உடம்புல போதைப் பொருள் இருக்கான்னு பாருங்க.... தனிப்பட்ட முறையில் யார் வேணும்னாலும் இரங்கலாம் ஆனால் எண்டர்டெயினர்களுக்கு பிரதமர், மத்தியாமைச்சர், முதல்வர்னு இரங்குவது தேவையற்றது.