Load Image
dinamalar telegram
Advertisement

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு: முதல் 3 இடங்களில் பெண்கள்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: யு.பி.எஸ்.சி., நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. முதல் 3 இடங்களை பெண்கள் முடித்துள்ளனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு கடந்த ஜனவரி மாதமும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு கடந்த ஏப்ரல் மாதமும் நடந்தது. அதன் இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 3 இடங்களை சுருதி ஷர்மா, அங்கீதா அகர்வால் மற்றும் காமினி சிங்லா ஆகியோர் பிடித்துள்ளனர்.Latest Tamil News

பிரதமர் வாழ்த்து



யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை: 2021ம் ஆண்டு சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் போது, இந்தியாவின் வளர்ச்சி பணியில் முக்கியமான நேரத்தில் நிர்வாக பணியை துவங்கும் இந்த இளைஞர்களுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அந்த அறிக்கையில் மோடி தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து (6)

  • Sampath - Chennai,இந்தியா

    UPSC exam not required. After NEET exemption, we will implement this. Kuruma will spearhead this move

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Ithu yenna saaraayam kudikkum pottiyaa thamizhan therchi peruvatharkku. Thiraavida maadal aatchiyil naankal than maanam izhanthu hindikkaaran nadaththum pottiyil pankupera maattom

  • S Vaidhinathan - Mannivakkam Chennai 600048,இந்தியா

    First 30la 2 per Tamil Peru madrigal theriyudhu. Athuvam telegu kannada irukkalam.

  • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

    அது சேரி தமிழகத்தில் இருந்து எவ்வுளவு பேர் முதல் 50 இடத்தில் வந்துருக்காங்க

  • MPRMTNJ - CHENNAI,இந்தியா

    தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்ற தகவலையும் சேர்த்து சொல்லிஇருந்தால் நன்றாக இருந்திருக்கும்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்