Load Image
dinamalar telegram
Advertisement

திருச்சி மாநகராட்சியில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

Tamil News
ADVERTISEMENT

திருச்சி:நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்றும்(மே 30), நாளையும் ஆய்வு மேற்கொள்கிறார்.
அதற்காக, தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், உறையூரில் உள்ள தி.மு.க., பிரமுகர் செல்வேந்திரன் வீட்டிற்கு சென்றார்.
திரும்பும் வழியில், பகல் 12.15 மணியளவில், திருச்சி மாநகராட்சிக்கு சென்ற அவர், குறைதீர் கூட்டத்துக்கு வந்திருந்த பொது மக்களிடம், கோரிக்கை மனுக்களைப் பெற்றார். நேரடியாகவும் சிலரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேருவும் அவருடன் இருந்தார். முதல்வரின் திடீர் வருகையால், மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தனர் .
சுமார் 15 நிமிடம் அங்கு இருந்து, மாநகராட்சி ஆவணங்களையும் ஆய்வு சரி பார்த்த முதல்வர் ஸ்டாலின், டி.வி.எஸ். அருகில் உள்ள சுற்றுலா மாளிகைக்குச் சென்று ஓய்வு எடுத்தார்.


வாசகர் கருத்து (9)

  • sethusubramaniam - chennai,இந்தியா

    முதல்வர் ஆய்வு செய்வது நல்லதுதான் . ஆனா மேயரை மறுபடியும் மாத்திடாமே இருக்கணும்

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    //சுற்றுலா மாளிகைக்குச் சென்று ஓய்வு எடுத்தார்//.... மற்றதெல்லாம் தேவையில்லாத ஆணி.... ஏனிந்த பில்டப்பு ?

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    ஆய்வு செய்வதற்கு எல்லாம் ஏதாவது விஷய ஞானம் வேண்டும். ஒன்றுமே தெரியாத ஒரு தத்தி என்னத்தை ஆய்வு செய்தானோ?

  • chandrakumar - tiruppur,இந்தியா

    எதுக்கு விஞ்ஞான அறிவை சொல்லி கொடுக்கவா??

  • jay - toronto,கனடா

    திருச்சியில் மட்டுமா மற்ற இடங்களையும் லஞ்சம் லஞ்சமா வாங்குறாங்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement