2 ஆண்டுகளுக்கு பின் இந்தியா - வங்கதேசம் ரயில் பயணம்
கோல்கட்டா: இந்தியா -வங்கதேசம் இடையிலான ரயில் 2 ஆண்டுகளுக்கு பின் தனது பயணத்தை துவக்கியது. முதல்நாளில் 100 க்குட்பட்ட பயணிகளே வந்திருந்தனர் . போக, போக பயணிகள் கூட்டம் மொய்க்கத்துவங்கும் என கிழக்கு பிராந்திய ரயில்வே மேலாளர் ஒருவர் தெரிவித்தார்.
கோவிட் காரணமாக வெளி நாட்டு விமான, ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது போக்குவரத்து சீராக துவங்கி இருக்கிறது. இந்நிலையில் வங்கதேசம் இந்தியா செல்லும் பந்தன் எக்ஸ்பிரஸ் இன்று (மே.29) புறப்பட்டு சென்றது. இன்னும் வரும் ஜூன்1 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் . கோல்கட்டா- டாக்கா, டாக்கா- கோல்கட்டா, செல்லும் ரயிலில் இரு நாட்டு பயணிகளும் மகிழ்ச்சியாக புறப்பட்டு சென்றனர்.


வங்கதேசத்தில் இருந்து வரும் மக்கள் இந்தியாவில் சிகிச்சை மற்றும் சுற்றுலா தொடர்பாக அதிகம் பேர் வருவது வழக்கமாக கொண்டுள்ளனர். கோவிட் காரணமாக இரு நாட்டு மக்கள் கடும் அளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்றைய ரயில் பயணம் மகிழ்வை தருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (2)
இந்திய வங்கதேசத்திற்கான இந்த ரயில் சேவை தேவையில்லாதது. இதனால் மேற்கொண்டு இந்தியாவிற்கு கூடுதல் பிரச்சனைகள்தான் வரும்.
இத்தனை நாளா திருட்டுத்தனமா நாட்டுக்குள்ள நுழைஞ்சிட்டு இருந்தானுங்க. இப்போ இவர்களே ரயில் அனுப்பி வரவைக்கிறாங்க.