Load Image
Advertisement

மதுரை, புதுச்சேரியில் தினமலர் வழிகாட்டி துவங்கியது: பெற்றோர், மாணவர்கள் உற்சாகம்

மதுரை: பிளஸ் 2வுக்கு பிறகு என்ன படிப்பு, எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம் என்பதற்கான அரிய ஆலோசனைகளை வாரி வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை மற்றும் புதுச்சேரியில் இன்று( மே 28) கோலகலமாக துவங்கியது.

மதுரையில் கோலாகலமாக துவங்கியது தினமலர் வழிகாட்டி



Latest Tamil News



பிளஸ் 2வுக்கு பின் எதிர்காலம் ஜொலிக்க உயர்கல்வியில் என்ன படிப்பு, எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம் என்பதற்கான அரிய ஆலோசனைகளை வாரி வழங்கும் தினமலர், கோவை ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி, இன்று (மே 28) துவங்கி மூன்று நாட்கள் மதுரை லட்சுமிசுந்தரம் ஹாலில் துவங்கியது.


பிளஸ் 2 எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் எதிர்கால நலன் கருதி நடத்தப்படும் உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி இன்று(மே 28), நாளை (மே29), நாளை மறுநாள்( மே30) என மூன்று நாட்கள் நடக்கின்றன. கல்வி, வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான இந்நிகழ்ச்சிகள் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கிறது.


சிறப்பு கருத்தரங்குகளில் புதிய படிப்புகள், அரசு வேலை வாய்ப்புகள், நீட் பிரத்யேக விளக்கம், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், கலை, சட்டம் உட்பட ஏராளமான பிரிவுகள் குறித்து துறைசார் நிபுணர்கள் பல்வேறு பயனுள்ள ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.


வேலை வாய்ப்பை எளிதாக்கும் 'டாப்' துறைகள், படிக்கும் போதே மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும் கல்வியாளர்கள் விளக்கமளிக்கின்றனர். அனுமதி இலவசம். இன்று காலை கண்காட்சி, கருத்தரங்கை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சி.இ.ஓ., சுந்தரராமன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
Latest Tamil News

விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை ஒரே இடத்தில்



இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என 90க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் அரங்குகள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் என விண்ணப்பம் முதல் மாணவர் சேர்க்கை வரையிலான நடைமுறை, கட்டணம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை பெறலாம். இதன் மூலம் கல்லுாரிகள், பாடங்களை தேர்வு செய்ய மாணவர்கள், பெற்றோர் அலைவது தவிர்க்கப்படும்.கல்வி நிறுவன ஸ்டால்கள் காலை 10:30 முதல் மாலை 6:30 மணி வரை இடைவேளையின்றி திறந்திருக்கும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளை பெற www.kalvimalar.com என்ற இணையதளத்திலும், 91505 74441 என்ற 'வாட்ஸ் ஆப்' எண் வழியாகவும் மாணவர்கள் பதிவு செய்யலாம்.


Latest Tamil News


வழிகாட்டுபவர்கள்



* வணிகவியல் - பேராசிரியர் சுப்பிரமணியன்

* அரசு வேலைகள்வேலைவாய்ப்பு ஆலோசகர் நித்யா

* கல்வி, வேலைவாய்ப்புகல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி

* கம்ப்யூட்டர் சயின்ஸ்பேராசிரியர் ராஜேஷ்குமார்

* ஐ.டி., துறை எதிர்காலம்டி.சி.எஸ்., நிர்வாகி பாபுராஜன்

* மரைன் கேட்டரிங் அன்ட் ஓட்டல் மேனேஜ்மென்ட் - பேராசிரியர் சுரேஷ்குமார்

* வேலை வாய்ப்புக்கான திறன்கள் மனிதவள ஆலோசகர் சுஜித்குமார்

* படிப்புகள், கல்லுாரிகள் தேர்வு தனித்திறன் பயிற்சியாளர் உஷா ஈஸ்வரன்

* கலை, அறிவியல் - பேராசிரியர் சுந்தரராமன்

* தன்னம்பிக்கை- தென்மண்டல ஐ.ஜி., ஆஸ்ரா கார்க் ஐ.பி.எஸ்.,

* சிவில் சர்வீசஸ் - மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.,

* சி.ஏ., படிப்புகள் - ஆடிட்டர் ராஜராஜேஸ்வரன்

* அனிமேஷன் அன்ட் மீடியா பேராசிரியர் கிேஷார் குமார்

* நீட், ஜே.இ.இ., - கல்வி ஆலோசகர் அஷ்வின்

* சைபர் செக்கியூரிட்டி - நிபுணர் சையது முகமது

* சட்டம் - முனைவர் சத்யகுமார்

* பொறியியல் - பேராசிரியர் பால்ராஜ்

* நுழைவு தேர்வுகள், கல்வி உதவித் தொகை கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன்

* தன்னம்பிக்கை 'தைரோ கேர்' நிறுவனர் வேலுமணி

* பாதுகாப்பு களத்தின் எதிர்காலம் பேராசிரியர் விவேக் ராம்குமார்

* கல்விக் கடன் - வங்கியாளர் வணங்காமுடி

*ஆட்டோமேஷன் தொழில் நுட்ப வல்லுனர் செந்தில்ராஜா



வழிகாட்ட வலு சேர்க்கும் நிறுவனங்கள்

தினமலர் நாளிதழுடன் கோவை ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து, இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முக்கிய 'பவர்டு பை' பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூட்ஸ் செயல்படுகிறது. கே.எம்.சி.ஹெச்., அன்ட் டாக்டர் என்.ஜி.பி., நிறுவனங்கள், ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, கோவை எஸ்.என்.எஸ்., இன்ஸ்டிடியூட்ஸ் ஆகியன இணைந்து வழங்குகின்றன.




டேப்லெட், வாட்ச், லேப்டாப் வெல்லப்போவது யாரு...

காலை, மாலை அமர்வில் உயர்கல்வி நிபுணர்கள் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியின் போது மாணவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்போரில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 'டேப்லெட்', 'வாட்ச்' பரிசு வழங்கப்படும். மாலை அமர்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 'லேப்டாப்' பரிசும் உண்டு.





புதுச்சேரியில் 'தினமலர்' வழிகாட்டி: 'அப்ளிகேஷன் முதல் அட்மிஷன்' வரை ஆலோசனை பெறலாம்





புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் இன்று 28ம் தேதி 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி கோலாகலமாக துவங்குகியது. இதில், 'அப்ளிகேஷன் முதல் அட்மிஷன்' வரை அனைத்து தேடல்களுக்கும் கல்வி ஆலோசனை பெறலாம்.
Latest Tamil News


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உள்பட அனைத்து வகை பாட திட்டத்திலும் பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு, உயர்கல்விக்கான ஆலோசனை வழங்கும் நோக்கில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் வழிகாட்டி கல்வித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான வழிகாட்டி கல்வித் திருவிழா, புதுச்சேரி சித்தன்குடியில், பாலாஜி தியேட்டர் பின்புறமுள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் இன்று 28ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு நடக்கிறது.


வரும் 30ம் தேதி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில், என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற கேள்விகளோடு காத்திருக்கும் மாணவர்களின் அனைத்து சந்தேகங்கள் மற்றும் உயர்கல்வி தொடர்பான தேடல்களுக்கும் ஒரே குடையின் கீழ் விடை கிடைக்கும்.


இந்த மெகா கல்வித்திருவிழாவில், 20க்கும் மேற்பட்ட கல்வி ஆலோசகர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில், உயர்கல்வியின் பல்வேறு பாடப் பிரிவுகள் மற்றும் அதற்கான வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. மருத்துவம், இன்ஜினியரிங், கலை, சட்டம், வேளாண்மை, கணினி அறிவியல், வணிகம், மல்டி மீடியா என அனைத்து வகை பாடங்கள் குறித்தும், வல்லுனர்களின் ஆலோசனைகளை பெறலாம். கைநிறைய சம்பளம் தரும் வேலைவாய்ப்புக்கான படிப்புகள் எவை; எதிர்கால வாழ்வை பிரகாசமாக்கும் பாட பிரிவுகள் என்ன; உயர்கல்வி படிக்கும்போதே, வளர்க்க வேண்டிய திறன்கள்; கல்லுாரிகளை தேர்வு செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து, நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர். வங்கிகளில் கல்வி கடன் பெறும் முறை குறித்தும், தெரிந்து கொள்ளலாம்.

கல்லுாரி அரங்குகள்



நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி ஆலோசனை நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோர், ஒவ்வொரு கல்லுாரிக்கும் நேரில் சென்று பெற வேண்டிய தகவல்களை, ஒரே வளாகத்தில் அமைந்துள்ள அரங்குகளில் நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.ஒவ்வொரு அரங்கிலும், உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்கள் நிறுவனத்தில் நடத்தப்படும் பாடப்பிரிவுகள், அதற்கான வேலைவாய்ப்புகள், விண்ணப்பங்கள், கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை நடைமுறை உள்ளிட்டவை குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.



நுழைவுத் தேர்வு


'நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், 'கிளாட்', 'நாட்டா', 'கேட்'போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், பிக் எப்.எம்.,-92.7, எஸ்.மீடியா, அக்குவா கிரீன் இணைந்து வழங்குகின்றன. 'அப்ளிகேஷன் முதல் அட்மிஷன்' வரை அனைத்து தகவல்களையும் அள்ளித் தரும் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பினை மிஸ் பண்ணாதீங்க.






அனுமதி இலவசம்


இன்று துவங்கிய 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி மூன்று நாட்களும், காலை, 10:00 மணி முதல், இரவு 7.00 வரை நடக்கிறது. நிகழ்ச்சியில் பயன் பெற வரும், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும், நுழைவு கட்டணம் எதுவும் இன்றி, இலவசமாக அனுமதிக்கப்படுவர்.

இன்றைய சிறப்பு அமர்வில் கல்வியாளர்கள்



காலையில் நடக்கும் சிறப்பு அமர்வில் விண்வெளி அறிவியல் குறித்து இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை,

அனிமேஷன் மல்டி மீடியா பற்றி பாபு ஷாஜன் கெவின்,

நுழைவு தேர்வுகள் மற்றும் ஸ்காலர்ஷிப் குறித்து நெடுஞ்செழியன் விளக்கம் அளிக்கின்றனர்.


மாலையில் நடக்கும் சிறப்பு அமர்வில் எதிர்கால சிறந்த படிப்புகள் குறித்து விவேக்ராம்குமார்,

ஐ.டி.சி.எஸ்., மற்றும் ஐ.ஓ.டி,, குறித்து பால்ராஜ்,

சிவில் சர்வீஸ் குறித்து புதுச்சேரி அரசின் தொழில் துறை செயலர் அருண் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மேலும், மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கின்றனர்.


வேலைவாய்ப்பை எளிதாக்கும் முன்னணி துறைகள் படிக்கும் போதே மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும் கல்வியாளர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.




காத்திருக்கும் பரிசுகள்


காலை மற்றும் மாலையில் உயர்கல்வி நிபுணர்கள் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில், மாணவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்போரில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, லேப்டாப், டேப்லெட் மற்றும் வாட்ச் பரிசாக வழங்கப்படும்.உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளை தொடர்ந்து பெற, www.kalvimalar.com என்ற இணையதளத்திலும், 91505 74441 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், தங்களின் பெயர் மற்றும் மாவட்ட விபரங்களுடன், மாணவர்கள் பதிவு செய்யலாம்.



வாசகர் கருத்து (1)

  • சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்

    புதுச்சேரியிலதான் நம்ம பிராக்சி ஆச்சி நடக்குது அதான் அங்க வச்சுக்கிட்டோம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement