Load Image
dinamalar telegram
Advertisement

பா.ம.க., தலைவராக ராமதாஸ் மகன் அன்புமணிக்கு ‛பட்டாபிஷேகம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: இன்று( மே 28) நடந்த பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சி தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பா.ம.க., சிறப்பு பொதுக் குழு கூட்டம், சென்னை, திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில், இன்று நடந்தது. பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக, தற்போது இளைஞரணி தலைவராக இருக்கும் அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய ஜி.கே. மணி, இளம் வயதில் மத்திய அமைச்சராக சிறப்பாக பணியாற்றியவர் என புகழாரம் சூட்டினார்.

புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி, கட்சியின் நிறுவனரும், தந்தையுமான ராமதாசுக்கு பூங்கொத்து கொடுத்தார்.

அப்போது, ஆனந்த கண்ணீர் வடித்த ராமதாஸ், அன்புமணியை ஆரத்தழுவி தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.Latest Tamil News

பா.ம.க., தலைவராக, 25 ஆண்டுகளாக இருக்கும் ஜி.கே.மணிக்கு, 24ம்தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அன்புமணி தலைவராக தேர்ந்தடுக்கப்பட இருப்பதாலேயே, மணிக்கு விடை கொடுக்கும் வகையில், பாராட்டு விழா நடத்தப்பட்டது.

வெற்றி பெறாதது தொண்டர்களின் குற்றம்Latest Tamil Newsஇந்த கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: ரியல் எஸ்டேட் தொழிலில் நீங்கள் காட்டுகிற ஆர்வத்தை ஏன் கட்சியை உயர்த்துவதில் காட்டவில்லை? 43 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வருகிறேன், இன்னும் அந்த கோலைத்தான் நான் ஏந்தவில்லை. தற்போது மூன்றாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணியை கோட்டையில் அமரவைக்க இங்கே ஒரு குடும்பமாக நாம் வருகை புரிந்துள்ளோம். 100 வாக்குகள் என்னால் வாங்க முடியும், எனக்கு பதவி எதுவும் வேண்டாம் என உழைத்து அன்புமணியை முதலமைச்சர் ஆக்குபவன் தான் உண்மையான தொண்டன். சில காக்கைகள் வரும் போகும், ஆனால் உழைப்பவரை உடன் வைத்துக்கொள்ள வேண்டும், அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என அன்புமணிக்கு கூறியுள்ளேன்.


நமக்கு இனி காக்கைகள் வேண்டாம். 2012ல் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி 2013ல் ஆட்சியை பிடித்தது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி; ஆனால் நம்மால் ஏன் முடியவில்லை? நம்முடைய கொள்கைகள் போல் நாட்டில் வேறு கட்சிகள் ஏதாவது கொள்கைகளை கொண்டுள்ளதா? இல்லையெனில் ஏன் நம்முடைய பலம் 4லிருந்து 40 ஆக மாறவில்லை? இது யார் குற்றம்? இந்த குற்றத்தை மீண்டும் நீங்கள் செய்யப்போகிறீர்களா? இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

தலைவர்கள் வாழ்த்துபா.ம.க., தலைவராகியுள்ள அன்புமணிக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (37)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  மதிமுக கடை வையாபுரிக்கு பாமக கடை அன்புமணிக்கு. பெரிய திராவிட கடை ஏற்கனவே ஒரு குடும்பத்திடம் இருக்கு .வாரிசுகள் வாழ்க

 • Engineer - California,யூ.எஸ்.ஏ

  வெட்டி பேச்சு ........இதனால் மக்களுக்கு என்ன பயன்?

 • கு.ரா.பிரேம் குமார் பெங்களூர் -

  தமிழகத்தில் ஜாதியை வைத்து அரசியல் செய்யும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை போல் மற்றொறு கட்சியான பா.ம.க.விற்கு , தலைவராக தன் மகன் அன்புமணியை தலைவராக்கிய தன் மூலம், பல்வேறு இந்திய கட்சிகளின் சித்தாந்தத்தை அதன் தலைவர் டாக்டர் ராமதாஸ் முறைப்படியாக நிறைவேற்றியுள்ளார். இதை ஒரு தேசிய-மக்கள் சேவை எண்ணம் கொண்ட விவேகமான நடவடிக்கை என அவர் தன்னை தானே முதலில் பாராட்டி கொள்ளலாம்! அன்புமணியை பாராட்ட கட்சிக்கு உள்ளே மட்டுமல்ல - வெளியே ஸ்டாலின் போன்றோரின் வாழ்த்தையும் வரவேற்பையும் கூட காண வேண்டிய துர்பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது.

 • சீனி - Bangalore,இந்தியா

  ,இவருக்கு நிரந்தர தலைவர் பதவியும், கட்சியில் உழைப்பவர்களுக்கு தேங்காய் மாக்காய், படாணி, சுண்டலும் வழங்கப்பட்டது.

 • रजा -

  வெயில் கொடுமை போதாது என்று நீங்க வேற டார்ச்சர் பண்றீங்க. கட்சியே உங்களது தான் அப்படி இருக்கையில் நீங்களே உங்களுக்கு பட்டாபிஷேகம் நடத்தி காமெடி பண்றீங்க வேறு யாரையாவது அந்த இடத்திற்கு போட்டி போட மாட்டார்கள் என்பது தெரியும் அப்படி தெரிந்து வேறு யாரையாவது நியமித்தாலும் அது ஒப்புக்கு சப்பாணி என்ற நிலைதான். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார் ஆனால் நிழல் பிரதமர் ராகுல் காந்தியும் அவருடைய அம்மாவும் தான் அதுபோல்தான் இருக்கும். தேவையில்லாம எதுக்கு இவ்வளவு செலவு செய்து விழா எல்லாம் எடுத்து சீன் போடறீங்க. டாஸ்மாக் விற்பனை கனஜோராக இருந்ததாக செய்தி.

Advertisement