ADVERTISEMENT
திருச்சி: திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி நீரை மலர்கள், விதை நெல் மணிகளை தூவி விவசாயிகள் வரவேற்றனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, கடந்த 24 ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீரை முதல்வர் திறந்து வைத்தார். அந்த நீர், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை வழியாக, இன்று திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், காவிரி நீருக்கு மலர்கள், விதை நெல் மணிகளை தூவி வரவேற்றனர். இந்த நீர் கல்லணைக்கு சென்றதும் கல்லணையிலிருந்து இன்று மாலை 5 மணிக்கு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. கல்லணையிலிருந்து திறக்கப்படும் நீர் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு செல்லும்.

எறிந்த தட்டு கண்ணுல பட்டால் பூக்கடைக்காருகிட்ட திருப்பி குடுத்துடுங்கப்பு...