
மதுரை - போடி இடையே 98 கி.மீ., துாரமுள்ள மீட்டர்கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணி 2011 ஜனவரியில் துவங்கியது. இத்திட்ட பணிகளுக்கு மத்தியில் முன் ஆட்சியிலிருந்து காங்., அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தேனி மாவட்ட வியாபாரிகள் போராட்ட குழு அமைத்து போராடினர். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு 2016ல் இந்த அகல ரயில் பாதைக்கு ரூ.450 கோடி அனுமதிக்கப்பட்டது.

முதல்கட்டமாக தேனி வரை இயக்கப்படும் இந்த ரயில் தினமும் மதுரையில் இருந்து காலை 8:30 மணிக்கும், தேனியில் இருந்து மதுரைக்கு மாலை 6:15 மணிக்கும் புறப்படும். கட்டணம் ரூ.45.

இன்றைய முதல் பயணம் பெரும் மகிழ்ச்சியாக உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். பஸ்சில் செல்வதை விட ரயிலில் பயணம் செய்வதால், கால நேரம் மிச்சமாகும் என்கின்றனர்.
இதேபோல் விரைவில் தூத்துக்குடி டு திருநெல்வேலி மற்றும் ராமேஸ்வரம் டு கன்னியாகுமரி ரயில் பாதை அமைக்க தென்னக மக்கள் மற்றும் எம்பீக்கள் கோரிக்கை வைக்க வேண்டும்.