Load Image
dinamalar telegram
Advertisement

முதல்வரின் நடத்தையால் வெட்கப்படுகிறேன்: அண்ணாமலை ஆவேசம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை : 'முதல்வர் ஸ்டாலின் நடத்தை கண்டு வெட்கப்படுகிறேன்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:இந்தியாவின் சாதாரண குடிமகனாகவும், பெருமை மிக்க தமிழனாகவும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் நடத்தை கண்டு வெட்கப்படுகிறேன். பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ., நிகழ்ச்சிக்கு வரவில்லை. பிரதமராக அரசு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

விழாவில், முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தினார். ஆனால், 1974ம் ஆண்டு தி.மு.க., - காங்., கூட்டணி ஆட்சியில் இருந்தபோதுதான், கச்சத்தீவு இலங்கைக்கு பரிசாக அளிக்கப்பட்டதை மறந்து விட்டார். திடீரென தற்போது விழிப்பு வந்தது ஏன்?

ஜி.எஸ்.டி., விவகாரத்தை பொறுத்தவரை, ஜி.எஸ்.டி., கவுன்சில் தான் அனைத்தையும் முடிவு செய்கிறது. இழப்பீடு தொகை, ஜூலைக்கு பிறகுதான் வழங்கப்படும். இதில் எந்த பிரச்னையும் இல்லை.முதல்வர் கூட்டாட்சி குறித்து பேசினார். ஆனால், கூட்டாட்சிக்கு உதாரணமாக திகழும் ஜி.எஸ்.டி., கவுன்சிலை இழிவுபடுத்துகிறார். நிலுவைத்தொகை முறைப்படி வழங்கப்படுகிறது. முதல்வர், தன் விருப்பத்தை மட்டும் தெரிவித்துள்ளார்.Latest Tamil News
ஒருமித்த கருத்தின்படி முடிவுகள் எடுக்கப்படுவதை, அவர் புரிந்து கொள்ளவில்லை.ஜி.எஸ்.டி., வருவாய் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. தமிழகமும் பயனடைந்துள்ளது. தி.மு.க., உண்மையை அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அரசியல் செய்வதில் மட்டுமே ஆர்வம். பிரதமர் நரேந்திரமோடி தமிழ் மொழி மீது தனக்குள்ள பாசத்தை வெளிப்படுத்தினார்.

பல இடங்களில், பல முறை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு முதல்வரிடம் பதில் இருக்காது என நம்புகிறேன். அவர், இவ்விஷயத்தில் அற்பத்தனமான அரசியல் மட்டுமே செய்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


அ.தி.மு.க., தலைவர்கள் மோடியுடன் சந்திப்பு

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, விழா முடிந்து இரவு 8:05 மணிக்கு விமான நிலையம் சென்றார். அங்கு, அவரை அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.அதேபோல, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், பிரதமரை சந்தித்து பேசினர். அரசியல் பிரமுகர்கள் சந்தித்த நிலையில், மதுரை ஆதினம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளும், பிரதமரை சந்தித்து நீண்ட நேரம் பேசினார்.இந்த சந்திப்பு முடிந்து, இரவு 9:25 மணிக்கு, விமானத்தில் பிரதமர் டில்லி புறப்பட்டு சென்றார்.

Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (177)

 • ramesh - chennai,இந்தியா

  இப்பொது ஸ்டாலின் கேட்டதால் தான் அணைத்து மாநிலங்களுக்கும் ஜீஎஸ்டி வந்தது .இப்பொது உங்கள் பேச்சிக்கு வெக்க படுங்கள்

 • Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா

  அண்ணாமலை ஒரு உலகமாக அதிபுத்திசாலி,

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   இப்போ இருக்கிற ஆட்சியாளர்களைவிட (முக்கியமாக டக்ளஸ்), அவங்களோட அல்லக்கை கூட்டணி தலைவர்களைவிட, இந்த மாதிரி கருத்து போடும் என்னை மாதிரி, உங்களை மாதிரி பதிவாளர்களை விட அண்ணாமலை புத்திசாலிதான் ... சந்தேகமே வேண்டாம் ....

  • knmcknmc - thiruchi,இந்தியா

   உண்மை.... மோடி ஜியை விட ஆதி புத்திசாலி ...

 • Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா

  இந்த நபரை யெல்லாம் ஒரு தேசிய கட்சியின் தலைவர் என்று சொல்வதே வெட்கக்கேடு

  • Ravi - Chennai,இந்தியா

   படிக்காத உங்களை மாதிரி ஆட்களெல்லாம் அண்ணாமலை குறை கூற தகுதி ஆற்றவர்கள் .

 • K G Gouthaman - bangalore,இந்தியா

  அண்ணாமலை அவர்கள் கூறுவது முற்றிலும் சரியே. தமிழக முதல்வரை தவறான பாதையில் செல்லத் தூண்டுகிறார்கள் அவரைச் சுற்றியுள்ள சிலர். அதை முதல்வர் உணர்வது நல்லது.

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   எனக்கென்னவோ, அந்த (முதல்வர் கனவில் இருக்கும்) டக்ளஸ், (ராஜ்ய சபா சீட்டு கிடைக்காத கடுப்பில் இருக்கும்) RSB போன்றவங்கதான் இருப்பங்களோன்னு தோணுது

 • R MANIVANNAN - chennai,இந்தியா

  முகத்தையே பார்க்க முடியல

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   பாக்க வேண்டாம் ..... அவ்வளவுதானே

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

   ....

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்