Load Image
dinamalar telegram
Advertisement

பயனர்களின் தகவல்கள் விற்பனை: டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.1,165 கோடி அபராதம்

Tamil News
ADVERTISEMENT
வாஷிங்டன்: பயனர்களின் தகவல்களை பாதுகாக்காமல் விளம்பர நிறுவனங்களுக்கு விற்றதாக டுவிட்டர் நிறுவனம் மீதான வழக்கில், அந்நிறுவனத்திற்கு ரூ.1,165 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

230 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருக்கும் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டர், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், லாகின் வசதி பாதுகாப்புக்காகவும் பயனர்களின் மொபைல் எண், இமெயில் முகவரியை சேமித்து வைக்கும் என துவக்கத்தில் அறிவித்திருந்தது. ஆனால் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை விளம்பர நிறுவனங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் டுவிட்டர் கைமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்த வழக்கை கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றம் விசாரித்தது.
Latest Tamil Newsஅப்போது டுவிட்டருக்கு எதிராக வாதாடிய பெடரல் டிரேட் கமிஷன், ‛டுவிட்டரை நம்பி வந்த பயனர்களின் தரவுகளை அவர்களுக்கு தெரியாமல் விளம்பர நிறுவனங்களுக்கு விற்றது தவறு. இந்த வியாபாரத்தால் டுவிட்டர் பல மடங்கு லாபத்தை வம்பாரித்ததாக' வாதாடியது. இதனையடுத்து, பயனர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்தியதற்காக, 150 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1165 கோடி) அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அபராத தொகையை செலுத்த டுவிட்டர் நிறுவனமும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (5)

  • Tamilan - NA,இந்தியா

    நீதிமன்றங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் . இவர்கள் எதுவுமே சம்பாதிக்காமல் எப்படி இந்த ட்விட்டர் என்ற சமூக கொட்டாரத்தின் , விஞ்சான கொட்டாரத்தின் மதிப்பு 40 பில்லியன் டாலர் ஆனது ?. கொள்ளையர்களின் கூடாரம், கொடூரர்களின் கொட்டாரம்தான் அணைத்து சமூக வலைதளங்களும் . பெரும்பாலான முன்னணி மீடியாக்களும் கூட .

  • Natarajan V - Bengaluru,இந்தியா

    ரூ.1,165 கோடி அபராதத்தில நமக்கு என்ன கிடைக்கும்? என்னா திருடனது நம்ம டேட்டா ... நமக்கு தான் பைசா வரணும்.

    • Kannan - Madurai,கனடா

      மிகச் சரியான கேள்வி, யாரிடம் அவர்கள் அபராதம் செலுத்துவார்கள்? இழப்பீடு மக்களுக்குத்தான் வழங்க வேண்டும்.

  • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

    பயனர்களின் தகவல்கள் விற்பனை: டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.1,165 கோடி அபராதம் indha அபராததினால் யாருக்கு லாபம் அத சொல்லுங்க பாஸ்

  • Somiah M - chennai,இந்தியா

    வெறுமனே அபராதம் விதிப்பதினால் என்ன பயன் .அவர்கள் விற்பனை செய்த பணத்தில் ஒரு பகுதியினை அபராதமாக கட்டிவிட்டு போகப்போகிறார்கள் ..இன்னும் கடுமையான தண்டனை வழங்கப் படவேண்டும் .

Advertisement