Load Image
dinamalar telegram
Advertisement

உருது மொழியை தடை செய்வோம்: தெலுங்கானா பா.ஜ., தலைவர் சர்ச்சை

Tamil News
ADVERTISEMENT
ஐதராபாத்: தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும் எனவும், ராம ராஜ்ஜியம் வந்தால் உருது மொழி தடை செய்வோம் எனவும் அம்மாநில பா.ஜ., தலைவர் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற யாத்திரையில் அம்மாநில பா.ஜ., தலைவர் பண்டி சஞ்சய் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மசூதி வளாகங்களில் எங்கு தோண்டினாலும் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. மாநிலத்தின் அனைத்து மசூதிகளையும் தோண்டி எடுப்போம். சிவலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த மசூதிகளை முஸ்லிம்கள் ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஏதேனும் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டால் அந்த இடத்தின் உரிமையை முஸ்லிம்கள் கோரலாம்.
Latest Tamil Newsதெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும். பா.ஜ.,வும் இந்த வாக்குறுதியை கொடுத்துள்ளது. அதுபோல தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, உருது மொழிக்கு தடை விதிக்கப்படும். 'ராம ராஜ்ஜியம்' வந்தால் உருது மொழியை முற்றிலும் தடை செய்வோம். முஸ்லிம்களின் கல்விக்கூடமான 'மதரஸாக்கள்' பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக மாறியிருப்பதால் அவர்களை அடையாளம் காண வேண்டும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தில் அனைத்து மதரஸாக்களும் மூடப்படும். இவ்வாறு அவர் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (32)

  • Tamilan - NA,இந்தியா

    மாநில உள்துறை உருது மொழிக்காரர்களிடம் உள்ளது. ஏற்கனவே இவரை ஜெயில் தள்ளினார்கள் . இனியும் அப்படி நடக்கலாம் . தீவிரவாதிகளிடம் உள்துறையை கொடுத்து ஹைதராபாத்தில் தீவிரவாதி கட்டுப்படுத்திவிட்டது ராவ் அரசு .

  • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

    //..தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் ...//..தெலுங்கானா திராவிட மாடல் தானே . அப்பறம் என்ன பிரச்சனை ?. திராவிட மாடல் கொள்கையை அவர் சொல்றாரு . உருது மொழியை தடை செய்வோம் என்றால் திராவிட மாடலுக்கு என்ன பிரச்சனை ? . அதுக்கு ஏன் இங்குள்ளவன் பொங்கனும் ?.

  • தமிழ்நாட்டுபற்றாளன் - CHENNAI,இந்தியா

    எல்லா மொழியும் சமமாக நடத்தப்படடால், 70 விழுக்காடு இந்தி பயன்பாடு குறித்து உள்துறை அமைச்சர் பேசியதை கண்டிக்கும் நேர்மையும் துணி வும் உண்டா? சமஸ்க்ருத மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படட அளவில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட்தா?

    • Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ

      ..கோடிங் படிச்சா வயித்து பொழப்புக்கு உதவும் ...

  • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

    டேய் திராவிட மாடல் எதையும் இடிக்காது , உருவாக்கும் / எதையும் சிதைக்காது சீர் சேயும் , யாரையும் மதத்தால் பிரிக்காது ஒன்று சேர்க்கும் / யாரையும் தாழ்த்தாது எல்லோரையும் சரி சமமா நடத்தும் யாரையும் புறக்கணிக்காது அரவணைக்கும் இது ஒரு கட்சியின் அரசு அல்ல ஒரு இனத்தின் அரசு :: ஸ்டாலின்

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    //இன்றைய தொழில் நுட்ப காலத்தில் மொழி ஒரு பிரச்னையே இல்லை//

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்