ஐரோப்பிய நாடான பிரிட்டன் சென்றுள்ள காங்., - எம்.பி., ராகுல், அந்நாட்டின் தொழிலாளர் கட்சி தலைவரும், எம்.பி.,யுமான ஜெர்மி கார்பினை சந்தித்து பேசினார். கடந்த 2015 - 20 வரையில் பிரிட்டன் பார்லி.,யில் எதிர்கட்சி தலைவராக இருந்த கார்பின், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை அடிக்கடி தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த காங்., செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ''ஜெர்மி கார்பினை பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேசியுள்ளார். அவரது கருத்துக்களுடன் மோடியும் உடன்படுகிறாரா என்பதை பா.ஜ., தலைவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்,'' என்றார்.
இந்தியாவுக்கு எதிராக ஏதாவது நாலு இடத்தில குண்டு வச்சு கலவரம் செய்து எதுனாச்சும் பண்ணி அது மூலம் ஆட்சியை பிடிச்சிரமுடியாதுங்கற ஏக்கம் இருக்கத்தானே செய்யும், பாவம்