Load Image
dinamalar telegram
Advertisement

பாலியல் புகாரால் 10 மில்லியன் இழந்த எலான் மஸ்க்..!

Tamil News
ADVERTISEMENT
வாஷிங்டன்: பாலியல் குற்றச்சாட்டு புகார் காரணமாக, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 10 மில்லியன் டாலர் குறைந்து போனது.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், கடந்த 2016ல் கலிபோர்னியாவுக்கு தனி விமானத்தில் பயணித்தார். அப்போது விமானப்பணி பெண்ணிடம், மசாஜ் செய்யுமாறு கூறி, பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும், இதனை மறைப்பதற்காக 2018ல் 25 ஆயிரம் டாலர் தொகையை ஸ்பேக் எக்ஸ் நிறுவனம் மூலம் அப்பெண்ணுக்கு கொடுக்கப்பட்டதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
Latest Tamil Newsஇதனை தொடர்ந்து, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த எலான் மஸ்க், டுவிட்டரில் ' எனக்கு எதிரான தாக்குதல்களை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இது ஜனநாயக கட்சியினரின் வழக்கமான, கேவலமான நாடகம். ஆனால் ஒரு நல்ல எதிர்காலத்திற்காகவும், உங்கள் கருத்து சுதந்திரத்திற்காகவும் போராடுவதில் இருந்து என்னை எதுவும் தடுக்காது என தெரிவித்திருந்தார்.

இதனிடையே பாலியல் குற்றச்சாட்டுக்கு கூறுவதற்கு முன்னதாக வியாழன்று, புளூம்பெர்க் பில்லியனர் பட்டியலில், எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 212 பில்லியன் டாலராக இருந்தது. பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து ஒரே நாளில் 10 மில்லியன் டாலர்கள் சரிவடைந்து, 201 பில்லியன் டாலராக குறைந்து போனது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (6)

  • Samathuvan - chennai,இந்தியா

    போச்சுடா, இதுக்கு தான் நாங்க சொல்றோம் பேசாமல் இந்தியாவில் செட்டில் ஆக பாருங்க, வெறும் 1000 ரூபாயில.உங்க கேஸை ஒன்னும் இல்லாமல் ஆக்கிருவாங்க.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    மில்லியன் டாலர் அல்ல - பில்லியன் டாலர் என்றிருக்க வேண்டும்.

  • JaiRam - New York,யூ.எஸ்.ஏ

    இவன் ஒரு பிராடு வாய் கொழுப்பு அதிகம் இவனோட நாக்குல சனி குடியேறிருச்சு சீக்கிரம் அழிந்து போவான். இவனுக்கு யாரையும் மதிக்க தெரியாத சைக்கோ.

    • Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ

      இவர் அப்பா கதை இன்னும் வில்லங்கமானது ..

  • Tamilan - NA,இந்தியா

    எல்லாவற்றையும் காசு கொடுத்து செட்டில் பண்ணிவிடுவார்கள் . இவரிடம் இருப்பது நூற்றுக்கணக்கான பில்லியன்கள் . ஒரு பில்லியன் 1000 மில்லியன் . 10 மில்லியன் எல்லாம் இவர்களுக்கு கால்தூசு போன்று

  • thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ

    ,,,,,

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்