Load Image
dinamalar telegram
Advertisement

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும்: ஸ்டாலின்

Tamil News
ADVERTISEMENT
சேலம்: பெட்ரோல், டீசல் மீது அதிகளவு வரி உயர்த்தப்பட்டதில், அதில் பாதியை தான் மத்திய அரசு குறைத்துள்ளது. மேலும் விலையை குறைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டம் திமுகவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளது. தொடர்ந்து வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கையை இந்த கூட்டம் மெய்பிக்கிறது. பொள்ளாச்சி பாலியல் கொடுமை, கொடநாடு கொலை, கொள்ளை தான் அதிமுக அரசின் சாதனை. சொந்த மாவட்டத்திற்கும், தொகுதிக்கும் பழனிசாமி எதுவும் செய்யவில்லை. எதிர்க்கட்சி தொகுதி என பாகுபாடு பார்க்காமல், 234 தொகுதியையும் எனது தொகுதியாக தான் பார்க்கிறேன்.


கடனில் தத்தளித்த தமிழகத்தை மீட்டுள்ளோம். நிதி நெருக்கடியில் இருந்து தமிழகம் மீண்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து உரிய தேதிக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு முறைதான் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு சரியாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இயற்கை திமுக ஆட்சிக்கு கொடுத்த வரத்தால், இந்தாண்டு மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. மக்கள் மட்டுமல்ல இயற்கையே நம் பக்கம் உள்ளது.
Latest Tamil Newsமற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் பணவீக்கம் குறைந்துள்ளது. மிகசிறந்த வளர்ந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க முடியும். 10 ஆண்டுகளாக முடங்கி கிடந்த தமிழகம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராட்டும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது. கடந்த ஓராண்டில் 25 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் தான் கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. உண்மையான ஆன்மிகவாதிகள் திமுக ஆட்சியை பாராட்ட வேண்டும். மதவாதிகள் தான் அரசு மீது அவதூறு பரப்புகின்றனர். அதை பற்றி கவலையில்லை. அறநிலையத்துறை சார்பில் 10 கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவித்தபோது, இதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள். ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்கும் போது, மாநில வரியும் குறையும். கடந்த ஓராண்டுக்கு முன்பே பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைத்துள்ளது. மத்திய அரசு இப்போது தான் கலால் வரியை குறைத்துள்ளது. பல மடங்கு விலையை ஏற்றிவிட்டு சிறிதளவு குறைத்துள்ளனர். பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மாநில அரசுகளை நெருக்கடியில் மத்திய அரசு தள்ளுகிறது.

இது எனது அரசு அல்ல. நமது அரசு. திராவிட மாடல் அரசு. திராவிட மாடல் என்பது இடிக்காது. உருவாக்கும்.மக்களுக்காக என் சக்தியையும் மீறி உழைப்பேன், உழைத்துக்கொண்டே இருப்பேன். என்னுடைய இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன், மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (70)

 • raja - Cotonou,பெனின்

  "என்னுடைய இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன்", எது தமிழகத்தை தமிழர்களை சுரண்டி துபாயில் முதலீடு போன்றதா இலக்கு.....

 • தேவதாஸ், புனே -

  ஓசியிலே..... கும்மி அடிச்சிட்டு போகலாம்னு பார்க்கிறே...... ம்..... நடத்து எவ்வளவு நாளைக்கு.....

 • alani -

  அடி வாங்காம போகமாட்ட நீ !! பின்ன பாருங்க மகன் தப்புதப்பா படிக்கறான்

 • M Ramachandran - Chennai,இந்தியா

  கருணாவிற்கு உள்ள சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ற பதில் பேசும் திறனும் கிடையாது. புத்தி கூர்மையும் அவர் போனால் கிடையாது.

 • M Ramachandran - Chennai,இந்தியா

  புளுகு மூட்டை விடியலை வெளியேட்ரும் நேரம் நெருஙககி கொண்டிருக்கிறது. மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்ர்கள். சமாளிக்க மஞ்சதூண்டிற்க்கு உள்ள பேச்சு திறனும் கிடையாது. புத்திக்கூர்மையும் கிடையாது.

Advertisement