Load Image
dinamalar telegram
Advertisement

‛‛நெஞ்சுக்கு நீதி படம் பார்க்கும் அமைச்சர்கள்: நெஞ்சு பதறும் சீமான்!

Tamil News
ADVERTISEMENT
சென்னை: உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் பார்ப்பதை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் மகனும், எம்எல்ஏ.,வுமான உதயநிதி நடித்து கடந்த மே 20ம் தேதி வெளியான திரைப்படம் ‛நெஞ்சுக்கு நீதி'. இப்படத்தின் முதல் காட்சியில் துவங்கி தற்போது வரை பல ஊர்களில் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் உட்பட அக்கட்சி நிர்வாகிகள் கூட டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி மக்களுக்கு இலவசமாக கொடுத்து படத்தை பார்க்க வைப்பதாக கூறப்படுகிறது. சில அமைச்சர்கள் தாங்களும் சேர்ந்து ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்து வருகின்றனர். அதனை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து படத்தை பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர். சில இடங்களில் படம் பார்க்க வருபவர்களுக்கு திமுக.,வினர் உணவு அளித்து வரவேற்பதாகவும் கூறப்படுகிறது.
Latest Tamil Newsஎம்எல்ஏ.,க்கள், அமைச்சர்கள், மேயர்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் இந்தத் திரைப்படத்தை ஓட வைப்பதற்காக இப்படியெல்லாம் செய்வதாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்ததாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மேயர்கள் உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள். படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்!. இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (41)

  • Ramachandran V - Chennai,இந்தியா

    கலைஞர் எழுதி தயாரிக்கப்பட்ட உளியின் ஓசை படம் ஆளே இல்லாமல் ஒட்டப்பட்டதே . நினைவில்லயா

  • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

    சும்மா படம் காண்பித்து போர் அடிக்குது அதுதான் ஒரு படம் போக்க போனாரு அது ஒரு குத்தமா

  • Aarkay - Pondy,இந்தியா

    தமிழ் சினிமா ஜாதீயத்தை விட்டு என்று வரும்? இவர்களுக்கு ஜாதியை விட்டால் வெரி கதைக்கரு கிடைக்காதா? இதிலே வேறு இருபதாண்டுகளுக்கு முன் நடந்த கதை, நாற்பதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கதை என சப்பைக்கட்டு வேறு. மக்களே ஜாதியை மறந்த நிலையில் இவ்ர்கள் எதற்க்காக தூபம் போட்டு மீண்டும் மீண்டும் தூண்டிவிடுகிறார்கள்? மக்களே உஷார் இந்த பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இறையாகாதீர்கள். ஜாதிய படங்களை புறக்கணிப்போம்.

  • nizamudin - trichy,இந்தியா

    நான்3 தடவை படம் பாத்தேன் /பிரியாணியும் கொடுக்கலே ஒரு மண்ணும் கொடுக்கலே /போய் சொல்லாதீங்கோ

    • Dhandapani - Madurai,இந்தியா

      பாவம் சார் இவருக்கு பிரியாணி கிடைக்கலை, மூணுதடவ படம் பார்க்க போயும் கிடைக்கலை , இதை பத்தி சீமான் விமர்சித்தால் நல்ல இருக்கும், போங்க சீமான் சார் நீங்களும் உங்க கட்சிக்காரங்களோட படம் பார்த்து பிரியாணி சாப்பிட்டு பொழைக்க பாருங்க சார்

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இந்த கேடுகெட்ட அமைச்சர்கள் படம் பார்ப்பதற்கு போலீஸ் காவல் வேறு. உருப்படுமா தமிழகம்??

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்