அதிகரிக்கும் போக்சோ வழக்கு: பெற்றோருக்கு தேவை விழிப்புணர்வு

சிறார்கள் மீதான பாலியல் குற்ற செயல்கள் அதிகரித்ததால், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கவும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் 'போக்சோ' சட்டம் கொண்டு வரப்பட்டது.குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக துாக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் தாக்கலாகும் வழக்குகளை, ஓராண்டுக்குள் விரைந்து விசாரித்து, தீர்ப்பளிக்க வேண்டும் என, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விழியுங்கள் பெற்றோரே!
'டாலர் சிட்டி'யான, திருப்பூரில், பலதரப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். இங்கு குழந்தைகள், சிறார்கள் மீது பாலியல் அத்துமீறல் ஏதாவது ஒரு வகையில் நடக்கிறது. இது போலீசாரின் பார்வைக்கு செல்லும் போது, அவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை எடுக்கின்றனர்.
'போக்சோ' வழக்குகளில், பெரும்பாலானவை, காதல், தகாத நட்பு, ஆசை வார்த்தைக்கு மயங்கி வீட்டை விட்டு வெளியேறும் போது, அத்துமீறல்கள் நடக்கின்றன. சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் அன்றாடம் ஒரு வழக்காவது பதிவாகிறது. இதில், பாதிக்கப்படும் சிறுவர், சிறுமிகள் அனைவரும், 12 முதல், 17 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர்.சிறுமிகள் சிலரிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து, நடைபெறும் பாலியல் அத்துமீறல், குழந்தை பிறக்கும் வரை வெளிவருவதில்லை. அதன் பின்னரே, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
பெண் சிறார்களை பாதுகாக்க, போலீசார், குழந்தைகள் நலக்குழு, சைல்டு லைன் உட்பட பல அமைப்புகள் உள்ளன. பள்ளி, கல்லுாரி, பொதுமக்கள் கூடும் இடங்கள் என, பல இடங்களில் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.வீடுகளில் தங்களின் குழந்தைகளை சில பெற்றோர்கள் கண்காணிக்காமல் அலட்சியமாக இருப்பதன் விளைவே இது. எனவே, வளரிளம் (டீன் ஏஜ்) பருவத்தில் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிப்பதோடு, விழிப்போடு இருந்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.
201 வழக்குப்பதிவு
திருப்பூர் மாநகரில் கடந்த இரண்டு ஆண்டில், (2021 மற்றும் 2022 ஏப்., வரை) 82 'போக்சோ' வழக்கு; புறநகரில், 119 வழக்கு என, மாவட்டத்தில் மொத்தம் 201 வழக்கு பதிவாகியுள்ளது. இரண்டு ஆண்டில், 'போக்சோ' வழக்கில், 27 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மற்ற வழக்குகள் போலீஸ், கோர்ட் விசாரணையில் உள்ளது. மாநகரில், கடந்த, 2013 முதல், 2022 ஏப்., வரை, 231 'போக்சோ' வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இம்மாதத்தில், மாநகர் மற்றும் புறநகரில், ஐந்து வழக்குகள் பதிவாகி உள்ளது.
வாசகர் கருத்து (17)
திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இளைஞர்கள் நடவடிக்கை சரியில்லை என்றுகூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகம் முழுவதும் பரவலாக இப்பொழுது இளைஞர் போக்கே சரியில்லை. முதல் காரணம்: பெற்றோர்களின் கவனிப்பு, கண்காணிப்பு இல்லாமல் போவதுதான். ஆகையால் முதலில் பெற்றோர்களுக்கு counselling (ஆலோசனை) நடத்தி, அவர்கள் மூலமாக இளைஞர் சமுதாயத்தை நேர்வழிக்கு கொண்டுவரவேண்டும்.
எல்லாம் கிருஷ்ணலீலை படித்த எபக்ட்டு
எதுவும் படிக்க வேண்டாம் . பங்கு தந்தையோட ரெண்டு நாள் இருந்தால் போதும் . உலகம் முழுக்க ...
இல்லை , லோத் கதை பைபிள் படித்த எபெக்ட் . நீயும் படி .
ராமசாமி தத்துவம் , உருப்படாத தமிழ் சினிமா , சின்னத்திரை ஆகியவை இருக்கும் வரை இந்த அக்கப்போர்களும் இருக்கும் ...ஒழுக்கம் நீதி நெறிகள் என்று கல்விநிலையங்களிலிருந்து திமுக அரசால் வெளித்தள்ளப்பட்டதோ , அன்றிலிருந்தே இந்த அசிங்கங்களுக்கு வேர் விட தொடங்கிவிட்டது ... இதனை இன்னும் பசுமையாக நிலைநிறுத்திக்கொண்டிருப்பது , சினிமாவும் சின்னத்திரையும் ......இனி இது திருந்துவது கடினம் ..
என்ன பண்றது கேடுகெட்ட விடியலுக்கு ஏமாந்து ஓட்ட போட்டதுக்கு இனி பெண்களின் பெற்றார் தான் விழிப்பா இருக்கனும்... ஏன்னா கேடுகெட்ட விடியலின் உடன்பிறப்புகள் கூட்டு பலாத்காரம் செய்யிறாருவோலே....இப்போ எல்லோரும் வெளியில் சுகந்திரமா சுத்துறானுவோ....இதுல கேடுகெட்ட அந்த ப்ரின்சிபாலு தமிழகத்துல சட்டம் ஒழுங்கு சூப்பர் ன்னு பெருமை பொங்க சொல்றான்.....
ஆசிபா கத்ராஸ்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுது
மகளை மணந்த கயவன் நினைவு வரலையா
பெற்றோர்களை செல்லாக்காசாக்கி பலதரப்பட்ட கொள்ளையர்கள் கொலையாளிகள் ரவுடிகளின் கையில் இளைய தலைமுறையை தாரை வார்த்த அரசியல் சட்டத்தின் பலன்கள் இவை