ADVERTISEMENT
மதுரை: மதுரை ஆவினில் நடந்த பணி நியமனங்கள் , முறைகேடுகள் குறித்து துணை பதிவாளர் (பால்வளம்) கணேசன் தலைமையில் விசாரணை துவங்கி உள்ளது.
மதுரை ஆவினில் 2019ல் அறிவிப்பு வெளியிட்டு 2020ல் மேலாளர் முதல் டெக்னீஷியன்கள் (எஸ்.எப்.,) வரை 61 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் பலர் நியமனம் செய்யப்பட்டனர்.
இதில் தகுதியில்லாதவர்களுக்கு பணி வழங்கியது, எழுத்து தேர்வு வினாத்தாள் 'லீக்', விண்ணப்பங்களில் இணைக்கப்பட்ட காசோலை மோசடி, தகுதியான பலருக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்காதது உட்பட பல முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை எழுந்தன.இதுகுறித்து ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் குழுவால் பலகட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதால் கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 81ன் படி தற்போது துறைரீதியான விசாரணையை துணைப் பதிவாளர் கணேசன் துவக்கியுள்ளார்
ஆவின் அலுவலர்கள் கூறியதாவது: 2020ல் நடந்த இப்பணிநியமனங்களில் பல முறைகேடுகள் நடந்திருப்பது அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டு வருகிறது.ஆனால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவில்லை. அவர்களிடமும் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

நாசர் நல்ல குணசித்திர ஆரிடடிஸ்ட். ஆனார் அவர் முக்கால்வாசி வில்லானாகத்தான் தூள்கிளப்புவார். நகைச்சுவையும் சிறப்பாக செய்வார்.