Load Image
dinamalar telegram
Advertisement

வண்டலூர் பூங்காவில் வரிக்குதிரை இறப்பு

Tamil News
ADVERTISEMENT
தாம்பரம் : வண்டலுார் உயிரியல் பூங்காவில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த வரிக்குதிரை, நேற்று இறந்தது.

வண்டலுார் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை, யானை, பறவைகள் உட்பட, 2,382 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.இப்பூங்காவில், 18 வயது நிரம்பிய, 'டீனா' என்ற வரிக்குதிரை ஒன்றும் பராமரிக்கப்பட்டு வந்தது. பொதுவாக, 18 முதல் 20 வயது வரை மட்டுமே, வரிக்குதிரைகள் உயிர் வாழும் தன்மை கொண்டவை என்பதால், இங்கிருந்த வரிக்குதிரை, வயது முதிர்வால் கடந்த 8ம் தேதி, திடீரென மயங்கி விழுந்தது.

இது குறித்த தகவலின்படி, அங்கு சென்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை டாக்டர் குழுவினர், வரிக்குதிரைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஒன்றரை மாத காலமாக பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்த இந்த வரிக்குதிரை, நேற்று மாலை உயிரிழந்தது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement