இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை: வெப்பச்சலனம் காரணமாக, இன்றும் நாளையும்( மே 22, 23) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 24
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
மே 25, 26ல்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும், நாளையும் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கும்
இன்று லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!