ஜெய்ப்பூர்: இந்திய ராணுவ தகவல்களை, பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளிக்கு பகிர்ந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இணைந்த இவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார். பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளிக்கு சமூக வலைதளங்கள் மூலம் ராணுவ ரகசிய தகவல்களை பரிமாறியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், கடந்த சில நாட்களாக பிரதீப் குமாரை கண்காணித்து வந்தனர். அதில், தகவல்கள் பரிமாறுவது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 18 ம் தேதி பிரதீப் குமாரை போலீசார் கைது செய்தனர். பிரதீப் குமாரிடம் நடந்த விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த ராணுவ செவிலியர் சேவை ஊழியர் என்ற பெயரில், பாகிஸ்தான் பெண் உளவாளி அவருக்கு அறிமுகமாகியுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணிடம் இருந்து பிரதீப் குமாருக்கு மொபைல்போனில் அழைப்பு வந்துள்ளது. அப்போது, காதல் வசனங்களை பேசியும், திருமணம் செய்வதாக கூறி ஆசை காட்டியும் ராணுவம் குறித்த ரகசிய தகவல்களை அந்த உளவாளி பெற்றது தெரியவந்துள்ளது.
டேஷ் பக்தால்ஸ் வரிசையில் வாங்கோ, எங்க இந்த செய்திக்கு சங் மங் எண்ணிக்கை கம்மியா இருக்கே ஏன்?? பெயர் பிரதீப் குமார் என இருந்தால் ராணுவ வீரர் இதே இந்நேரம் அந்த ராணுவ வீரர் மற்ற மதத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால் இந்நேரம் நமது நடுநிலை ஏடு தலைப்பு வேறு மாதிரி போட்டிருக்கும் டேஷ் பக்தால்சும் வரிந்து கட்டி வந்து மதம் இனம் ஜாதி எல்லாம் இழுத்து வன்மத்தை கொட்டி இருப்பானுங்க, இதுவரை பத்துக்கும் மேற்பட்ட துரோகிகளை கைது செய்திருக்கிறார்கள் ஆனால் இதில் யாரும் மாற்று மதத்தினர் கிடையாது, நாங்க தான் தேச பக்தால்ஸ் என பொதுவெளியில் தேச பக்தி வேஷம் ஆனால் அண்டர்கிரவுண்டில் இதெல்லாம் ஒரு பொழப்பு ....
யாராக இருந்தாலும் அவன் எந்த மதத்தை சார்ந்தவன் என்றாலும் குறிப்பாக எங்கள் இந்து மதத்தை சேர்ந்தவன் என்றாலும் குற்றம் புரிந்தால் அவன் குற்றவாளியே.ஏன் இதற்காக தங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம் ?
இந்தியாவின் ரகசியங்களை உளவு பார்த்து சொன்ன அந்த பதிமூன்று நபர்களும், அந்த குறிப்பிட்ட உயர் சமூகத்தை சேர்த்தவர்கள் ஆனால் அது குறித்து, எந்த சங் மங், பக்தால்ஸ் எல்லாம் வாயே திறக்க மாட்டார்கள். அத சமூகத்தை துரோகி என அடையாளப் படுத்துவார்களா?
கேடுகெட்ட மூர்க்கன் இந்தமாதிரியான விஷயங்களை அறிவதற்கு பெண்களின் முதுகில் தான் சவாரி செய்வான் நேரடியாக மொத்தமாட்டான்
"இந்து மதத்தை சேர்ந்தவன் என்றாலும் குற்றம் புரிந்தால் அவன் குற்றவாளியே"
இங்கு யாரும் வரிசை கட்டிவந்து அவனுக்கு வாழ்த்து சொல்லவில்லையே தேசத்துரோகி என்றால் சொந்த மதமாக இருந்தாலும் அவனுக்கு யாரும் முட்டுக்கொடுக்கவில்லை என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். மற்ற மதத்தவருக்கு கொடுக்கும் தண்டனையை விட அவனுக்கு பலமடங்கு கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்கும், ஆனால் பெண்கள் கல்வி கற்பதற்கான, ஆடை உடுத்துவதற்கான உரிமையை தடை செய்யும் தாலிபான் கூட்டத்தினர் பெண் தன்னை இழந்து கூட எதிரியின் ரகசியத்தை அறிந்து கொள்ள அனுமதிப்பதை பார்த்தால், பெண்களை பிள்ளை பெரும் இயந்திரமாக மட்டுமன்றி இதுபோன்ற சில காரியங்களுக்கும் உபயோகப்படுத்துகின்றார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது.
சுப்பு அவர்களே அதைத்தான் நானும் சொல்கிறேன் தேசத்துரோகிகளுக்கு ஜாதி மதம் கிடையாது கடந்த காலங்களில் இதிலும் மதமே முக்கியப்படுத்தப்பட்டது அதை உணர்த்தவே அப்படி எழுதினேன்
இவனை தூக்கிலிடுங்கள்.