Load Image
dinamalar telegram
Advertisement

வீணா எதற்கு... வேலை கொட்டிக் கிடக்கு!

Tamil News
ADVERTISEMENT
பள்ளி, கல்லுாரிகளில் படித்து முடிப்பவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வழக்கம். தொழில்நுட்பக் கல்வித் தகுதிகளை பதிவு செய்வதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வரவேண்டும். அப்போதுதான் பதிவு மூப்பு அமலில் இருக்கும்.கடந்த மாத நிலவரப்படி, அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டிருந்தது.அதன்படி, மொத்த பதிவுதாரர்களின் எண்ணிக்கை 76 லட்சத்து 35 ஆயிரத்து 59 ஆக உள்ளது. 24 வயது 35 வயது வரையுள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை மட்டும் 28 லட்சத்து 93 ஆயிரத்து 506 ஆகும்.


அதேபோல், 19 முதல் 23 வயது வரை உள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 83 ஆயிரத்து 755 ஆக உள்ளது. மொத்த பதிவுதாரர்களில் இளங்கலை படிப்பு மற்றும் பி.எட்., படித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 58 ஆயிரத்து 795 ஆகவும், முதுகலை படிப்பு மற்றும் பி.எட்., படித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரத்து 350 ஆகவும் அதேபோல், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 470 ஆகவும் உள்ளன.
Latest Tamil Newsதொழில்முனைவோர் சிலர் கூறியதாவது:திருப்பூர் போன்ற நகரங்களில், வேலைவாய்ப்புகள் குவிந்திருக்கின்றன. இருப்பினும், இளைஞர்கள் பலர், அரசு வேலைவாய்ப்புக்காகத் தான் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். சுய தொழிலுக்கான வாய்ப்புகளையும் புறம் தள்ளிவிடுகின்றனர். அனைவருக்கும் வேலைவாய்ப்பை அரசே ஏற்படுத்தித்தரும் என்பது இயலாதது.அரசு துறைகளை காட்டிலும், அதிக சம்பளம் தரக்கூடிய தனியார் துறைகள் அதிகரித்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் என்றில்லாமல், பல்வேறு துறைகளிலும் மிளிரக்கூடியவர்களுக்கு, சம்பளத்திற்கான வரையறையே கிடையாது.

திருப்பூரில், 20 லட்சம் தொழிலாளர்கள் தேவைப்பட்டாலும், 10 லட்சம் என்ற அளவுக்கு தான் தற்போது உள்ளனர். புத்தாக்க சிந்தனையுடன் யோசிக்கும் இளைஞர்கள், திருப்பூரில் தொழிற்சாலைகளை நிர்வகிக்கவும், தொழில் துவங்குவதற்குமான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.கடின உழைப்பு, அர்ப்பணிப்புணர்வுடன் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு இன்று இல்லாவிட்டாலும் குறித்த கால இடைவெளிக்கும் வெற்றி கிடைக்கும் என்பது திண்ணம்; வாய்ப்புகளை வசமாக்கிக்கொள்வது இளைஞர்கள் கையில்தான் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (10)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    அரசு வேலை கிடைத்தால்தான் நோகாமல் நுங்கு தின்னலாம். மேல் வருவாய் கிடைக்கும. தனியார் வேலையில் ஏமாற்ற முடியாது.

  • Sundra - Penang,மலேஷியா

    Government job no need to work can get pay every month. Most of people like this job.

  • S.Ganesan - Hosur,இந்தியா

    கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் இருக்கும் தொழில் நிறுவனங்களின் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும். அதனால் பலரும் அதிக சம்பளம் கிடைக்கும் வேலைகளை, குறிப்பாக அரசு வேலைகளை, அதன் மூலம் கிடைக்கும் சம்பளம், மேல் வருமானம் போன்றவற்றுக்கு ஆசைப்படுகிறார்கள்

  • chandrakumar - tiruppur,இந்தியா

    மிக ஆரோக்கியமான செய்தி உண்மைதான் தமிழக இளைய சமுதாயம் திருப்பூரில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புக்களை தன் வசமாக்கி கொள்ளவேண்டும் என்பதே எங்கள் மனப்பூர்வமான ஆவல்.......

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    நான் எழுபத்து ஏழாம் ஆண்டு என் பட்டப்படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்தேன். ஒரு சில ஆண்டு காத்தலுக்கு பிறகு ஒரேயொரு முறை அழைப்பு வந்தது. வேலூர் சிறைச்சாலையில் warden post. நேர்முக தேர்விற்கு அழைத்தார்கள். அங்கு என்னை பார்த்தவுடனே "நீ அதற்கு லாயக்கில்லை" (வடிவேல் பட காமெடி போல்) என்று நிராகரித்துவிட்டார்கள். வடிவேலுவுக்கு கடைசிவரை காரணத்தை கூறமாட்டார்கள். ஆனால், எனக்கு நிராகரித்ததன் காரணத்தை கூறினார்கள். காரணம்: நான் ஒரு ப்ராஹ்மணன், மிகவும் ஒல்லி சரீரம், பயந்த சுபாவம். அதன் பிறகு எந்த வாய்ப்பும் வரவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலை கிடைக்கவேண்டுமென்றால், அங்கு பணிபுரிபவர்களுடன் நல்ல உறவு (அவர்களுக்கு மாமூல் அடிக்கடி கொடுத்து) வைத்துக்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் நமக்கு தேவையான வேலை வாய்ப்பை காட்டுவார்கள்.

Advertisement