Load Image
dinamalar telegram
Advertisement

பதவியில் இருப்போருக்கு பல்லக்கு தூக்கும் ஆண்மை

Tamil News
ADVERTISEMENT
ஈரோடு :பேரறிவாளன் விடுதலை குறித்து காங்., தலைவர்கள் கருத்தை கேலி செய்து, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரின் கணவர், 'பேஸ்புக்'கில் காங்கிரசாரை கடுமையாக சாடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க., துணை பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன். ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன் விடுதலைக்கு, காங்., தலைவர்கள் அழகிரி உட்பட பலரும் கருத்துதெரிவித்துள்ளனர்.

சகுனங்கள் கண்முன்!இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் வீட்டுக்கு வந்த பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாளுக்கு, திருமணச்சீர் போன்ற பொருட்களை வழங்கினர். இது தொடர்பாக, ஜெகதீசன் தனது பேஸ்புக் பதிவில், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற தயாராகும் சகுனங்கள் கண்முன்!' என, கருத்து தெரிவித்துள்ளார்.தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவுகள்:பேரறிவாளன் மற்றும் விடுதலை புலிகள் பற்றி தி.மு.க.,வுக்கு உடன்பாடற்ற மாற்று கருத்துக்களை சொல்லும் அழகிரி போன்றோரின் மாற்று கருத்துக்களுக்கு பதிலிடுவதை தவிருங்கள்.ஒட்டாத அந்நியம்அது அவர்களது 'சர்வைவலு'க்கான பதிவுகள். ஒரு கை ஓசை அது. கீழ்பவானி பிரச்னை, காளிங்கராயன் பிரச்னையில் தெளிவற்ற நோக்கு அவர்களுடையது. அன்று இளங்கோ; இன்று அழகிரி; கார்த்திக் சிதம்பரம்; நாளை எவரோ?

Latest Tamil News
எல்லாம் தனக்குத்தான் தெரியும் என நுனிப்புல் மேய்ந்து, சுயபுராணம் பாடிக்கொண்டே காலம் தள்ளட்டும் என விட்டு விடுங்கள்.கிச்சத்தில் ஒட்டாத சட்டை; புட்டத்தில் ஒட்டாத வேஷ்டி; மக்களிடம் ஒட்டாத அந்நியம். மக்கள் உணர்வுக்கு நியாயத்துக்கு குரல் கொடுக்கும் வலிவின்மை. பதவியில் இருப்போருக்கு பல்லக்கு துாக்கும் ஆண்மை, அவர்களின் தனிச்சொத்து. இவை உட்பட பல கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவரது தளத்திலும், பகிரப்பட்ட தளங்களிலும், காங்கிரஸ் கட்சியினர், சுப்புலட்சுமி ஜெகதீசன் குறித்து பல சர்ச்சையான கருத்துக்களையும், கூட்டணி உடைவது பற்றியும் பகிர்ந்து வருகின்றனர்.

'சொல்ல எதுவும் இல்லை!'''தி.மு.க.,வுடனான கூட்டணியை காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்தது,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளை ஒட்டி, தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான, சென்னை சத்தியமூர்த்தி பவனில், ராஜிவ் உருவப் படத்திற்கு, அழகிரி, திருநாவுக்கரசர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அழகிரி தலைமையில், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பின், அழகிரி அளித்த பேட்டி:ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்ககப்பட்ட பேரறிவாளன் விடுதலை, எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் கட்டியணைத்தது பற்றி, நாங்கள் சொல்ல எதுவும் இல்லை. பேரறிவாளனை கட்டியணைத்தாலும், முத்தம் கொடுத்தாலும் எங்களுக்கு எதுவும் இல்லை.தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இது தெரிந்து தான் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. இது தெரிந்து தான், ராகுலை பிரதமர் வேட்பாளராக, ஸ்டாலின் அறிவித்தார்.
கூட்டணி முடிவுகளை காங்கிரஸ்மேலிடம் தான் எடுக்கிறது. தி.மு.க.,வுடன் கூட்டணி என்பதையும், மேலிடம் தான் முடிவு செய்தது.இவ்வாறு அவர் கூறினார்.

Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (35)

 • jayvee - chennai,இந்தியா

  அழகிரிக்கு இதைவிட மேலும் அசிங்கம் தேவை..

  • madhavan rajan - trichy,இந்தியா

   இந்தியாவை பொறுத்தவரையில் காசு வந்தால் எந்த அசிங்கத்தையும் பொறுத்துக்கொள்ளலாம் என்பது அரசியல் கணக்கு. அதனால்தான் பல விவஸ்தை கேட்ட கூட்டணிகள் இங்கே உலா வருகின்றன.

 • sankaseshan - mumbai,இந்தியா

  பேட்டரிவாளனை ஆதரிக்கவும் முட்டு கொடுக்கவம் முதலைச்சர் உட்பட தேசவிரோத சக்திகள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் முதல்வர் கொலைசெய்த்தவனை கட்டிப்பிடித்து கொஞ்சி விட்டு ஊட்டியில் ராஜிவ் சிலைக்கு மரியாதை செய்கிறார்

  • madhavan rajan - trichy,இந்தியா

   அதில் என்ன தவறு வடிவேலு படத்தில் வருவதுபோல உங்களிடம் வாங்கிய பணத்துக்கு உங்கள் சின்னத்தில் ஒரு குத்து. அவரிடம் பணம் வாங்கியதில் அவருடைய சின்னத்தில் ஒரு குத்து. ஆக இரண்டு குத்து குத்துவோம்.

 • Mohan - Salem,இந்தியா

  ஆஹ்ஹாஆரம்பிச்சுட்டாங்கய்யா இந்த திமுக வினர் தங்களது இரத்தத்தில் ஊறிய பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் செயல்களை அம்மாவிடம் பயந்து பரணில் போட்டிருந்த எல்லா தவறான கொள்கைகளை வெளியில் உலாவ விட்டு விட்டார்கள். 1. ராஜீவ் கொலையாளிகளை கட்டிப்பிடித்து கொண்டாடும் போது மறந்தது:: நாலாந்தர ரவுடிகள் போல பட்டப்பகலில் தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக அறிமுகப்படுத்திய துப்பாக்கி கலாசாரத்தை சென்னை பாண்டிபஜாரில் அரங்கேற்றி சக போராளி பத்மநாபாவை சுட்டதால் கருணாநிதி எதிர்த்த LTTE இயக்கத்தின் அங்கத்தினரான பேரறிவாளனை எந்த காரணத்தாலோ( மதம் தான் வேறென்ன ? ) திமுக வினர் எதனால் கடைசிவரை ஆதரிக்கின்றனர் ?? 2. மக்களும் காங்கிரஸும் மறந்த விஷயம்:- ஜெ. சொல்லியபடி2006 2011 .. காங்கிரஸின் தயவில் நடந்த கருணாநிதியின் மைனாரிட்டி ஆட்சியினை காப்பாற்றி தக்க வைத்த காங்கிரஸை எட்டப்ப துரோகிகளாய் மாறி ...முதுகில்...குத்தி ராஜீவ் கொலையாளியை விடுதலை செய்ய வைத்து கட்டிப்பிடித்து கொண்டாடும் சூப்பர் தலைமையில் பயணம். 3. நில உரிமை பறிப்பு, பதிவு தகிடுதத்தங்கள், பதிவில் விளையாடும் லஞ்ச விஷயங்கள் 4. தேவையின்றி ஆத்திகர்களை அவமதித்தல். எந்த கூந்தலுக்கோ கடவுள் நம்பிக்கையற்ற தி.க.வினரை வைத்து கோவில்களிலும், மடங்களிலும் இந்துக் கடவுள்களையும்,பழக்க வழக்கங்களையும் மட்டும் கேவலப்படுத்துவது 5. இன்று அவர்களால் தலையில் வைத்து கொண்டாடும் உச்ச நீதிமன்றம் ""நேற்று முன்தினம்"" வழங்கிய ""நீட் தேர்வு கட்டாயம்"" என்கிற தீர்ப்பு வழங்கப்படவே இல்லை என்பதைப்போல கமுக்கமாக இந்த கொலையாளியை வைத்து திமுக செய்யும் டகல்பாஜி வேலையைப் பற்றி இன்றைய அல்லக்கை உதயநிதி ரசிக சிகாமணிகளுக்கு புரியாது. 5.சட்ட மேதை அம்பேத்கர் 3ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தை தங்கள் சொந்த லாபங்களுக்காக .. சட்டம் சரியில்லை என மாற்ற ஏற்பாடு செய்வது ஏமாற்று வேலை

 • ... - ,

  யாரையும் காணோம்...

 • ... - ,

  அழகிரி க்கு ஒரு முழம் கை ரு யாராவது அனுப்புங்கள்...

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்