Load Image
dinamalar telegram
Advertisement

குவாட் மாநாட்டில் பங்கேற்க மோடி இன்று ஜப்பான் பயணம்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி, :ஜப்பானில் நடக்கும் 'குவாட்' மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அங்கு செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ள அமைப்பு குவாட். கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு, இரண்டாவது குவாட் மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடந்தது.
இந்நிலையில், மூன்றாவது குவாட் மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை மறுதினம் நடக்கிறது.இதில் பங்கேற்க பிரதமர் மோடி, ஜப்பானுக்கு இன்று இரவு புறப்பட்டு செல்கிறார்.
Latest Tamil News
ஜப்பானில் 40 மணி நேரம் தங்கியிருக்கும் பிரதமர் மோடி குவாட் மாநாட்டில் பங்கேற்பதுடன், ஜப்பான் பிரதமர் கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரை தனித்தனியே சந்தித்து, இரு தரப்பு உறவுகள் பற்றி பேசுகிறார்.அத்துடன், 40க்கும் அதிகமான ஜப்பான் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் சந்தித்து பேசும் பிரதமர், அவர்களை இந்தியாவில் முதலீடு செய்யஅழைப்பு விடுக்கிறார்.உக்ரைன் - ரஷ்யா விவகாரம் பற்றிதான், குவாட் மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிலிருந்து நாளை மறுதினம் இரவு, தாயகத்துக்கு புறப்படுகிறார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (11)

 • Tamilan - NA,இந்தியா

  தமிழக பயணத்தின் பொது தமிழகத்தில் சர்ச்சைகளை கிளப்பாமல் வந்த வேலையை பார்த்துவிட்டு செல்ல கற்றுக்கொள்ளவேண்டும் .

  • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

   ,,,

  • Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   எரநூறு ஊவா உப்பிஸ் கும்பல் வாங்குன காசுக்கு மேல கூவுதுக.. நம்ம கம்பெனிக்கு கிடைத்த அடிமைகள் மிக மிக நல்லவர்கள் - இப்படிக்கு திருடர் முன்னேற்ற கழகம்

 • Samathuvan - chennai,இந்தியா

  வெற்றியுடன் திரும்பி வர நாங்கள் வாழ்த்துகிறோம்.

  • RAMESH - chennai,இந்தியா

   உன் வாழ்க்கையிலேயே முதன் முறையா வேறு வழியே இல்லாமல் நமது பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்காய் . சந்தோஷம் . நீயே மாறு அல்லது காலத்தின் போக்கில் மாற்றப்படுவாய்

 • Raja - Coimbatore,இந்தியா

  டிரம்ப்பையும், ஸ்காட் மொரிசன்னையும் வீட்டுக்கு அனுப்பி வைச்ச மாதிரி கிஷிதாவையும் வீட்டுக்கு அனுப்பி வைக்க போறாரரோ.

  • Soumya - Trichy,இந்தியா

   முரசொலி படிச்ச ஓசிகோட்டர் கூமுட்டை வேறு எப்படி யோசிப்பான்

  • Raja - Coimbatore,இந்தியா

   நான் வேலை செய்யும் நாட்டில் ஓசி குவாட்டர் கிடையாது.

 • voice of Rahul gandhi -

  இப்பதான எங்கியா போய் வந்தீக.. சும்மா சும்மா போய் போய் திரும்பாதீங்க.. அங்கியே எதாவது ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கிட்டு அடுத்த நாட்டுக்கு அப்படியே போலாமே! அல்லா நாட்டுக்கும் போய்ட்டு 2024 ELECTION சமயத்துல திரும்பி வந்தா போதும். GAS விலை 1036 கொடுத்து எங்களுக்கு வாங்க வழியில்ல.. நீங்க பாட்டுக்கு எங்க வரி பணத்த செலவழிச்சு உலகம் சுத்தநீங்க....

  • RAMESH - chennai

   ....

 • vadivelu - thenkaasi,இந்தியா

  ஆமாம், அதே விமானம்தான், நாம் தலை முறை தலை முறையாக இந்திய நாட்டை ஆளும் மன்னர்களாக இருக்க போகிறோம் என்று நினைத்து பல கோடிகள் அரசு பணத்தை கொடுத்து சகல வசதிகளையும் கொண்ட விமானத்திற்கு ஆர்டர் கொடுத்து வாங்கினார்கள் அதே விமானம்தான் .கோபம் வராதா? பாவம் அடுத்தும் இல்லையாம், இப்போதைக்கு இல்லை என்றால் இனி எப்போதிக்கும் இல்லையாம்.இப்ப மோடி, அடுத்து வேறு யாரோ செல்ல இந்த விமானம்.மோடிக்கோ அதில் உள்ள அத்தனை வசதிகளும் அனுபவிக்கவே தெரியலியம், சும்மா உட்கார்ந்து அடுத்து வேலை என்ன என்று யோசித்திப்பது மட்டும்தான்.பார், கிட்சன் எல்லாம் வேஸ்ட்டு

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்