சிறையில் சாப்பிடாமல் தவிக்கும் சித்து

இம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்., முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, 1988ல் தெரு சண்டையில், குர்னாம் சிங் என்பவரை முகத்தில் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில், சில ஆண்டுகளுக்கு முன், நவ்ஜோத் சித்து 1,000 ரூபாய் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டார்.இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி குர்னாம் சிங் குடும்பத்தார் அளித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நவ்ஜோத் சித்து பாட்டியாலா மத்திய சிறைச்சாலையில், 10ம் எண் சிறையில் அடைக்கப்பட்டார்.இது குறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதல் நாள் இரவு சிறையில் தந்த உணவை சாப்பிட சித்து மறுத்து விட்டார். வீட்டில் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார். இரவு முழுதும் அவர் துாக்கமின்றி தவித்தார்.

சிறையில் அவருடன் நான்கு கைதிகள் உள்ளனர். அவர் பெயர், பாட்டியாலா சிறையில், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 683வது கைதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடுங்காவல் என்பதால் சிறைக் கைதிகளுக்கான அனைத்து வேலைகளையும் சித்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில், நவ்ஜோத் சித்துவை எதிர்த்து போட்டியிட்ட அகாலி தள தலைவர் பிக்ரம் சிங் மஜிதியாவும், போதை பொருள் வழக்கில் கைதாகி பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி வேட்பாளர் ஜீவன் ஜோத் கவுரிடம் தோல்வி அடைந்த இருவரும், தற்போது ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (23)
பிஜேபியில் இருந்த போது சித்து மற்றும் அவரின் மனைவி இருவருக்குமே முறையே MP MLA பதவிகள் கொடுத்து இருந்தனர். அருண் ஜெட்லீ மாதிரி படித்த தலைவருக்கு தன் தொகுதியை விட்டுத்தர மனமில்லாமல் முறைத்து கொண்டு உள்ளடி வேலைகளை மூலம் அருண் ஜெட்லீயை தோற்க வைத்து பின் கட்சியை விட்டு வெளியேறினார். இத்தனைக்கும் இவருக்கு ராஜ்யசபை உறுப்பினர் பைசா செலவில்லாமல் கிடைத்து இருக்கும். பேராசை. காங்கிரஸில் நுழைந்து நல்ல இருந்த முதல்வர் அம்ரிந்தரை, கட்சியை ஆட்சியை என்று வரிசையாக ஒழித்து கட்டினார். இவரது மனைவி ரயில்வே லைனுக்கு அருகில் காங்கிரஸ் கட்சியின் மீட்டிங் போட்டு 50 க்கும் மேற்பட்டோரை கொன்றார். பற்றா குறைக்கு பாகிஸ்தானிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான பேச்சுகள் வேறு. சென்னையில் ருசியான உணவில்லை ஆனால் பாகிஸ்தான் உணவு சொர்கம் உணவு விஷயத்தில் பாக்கிஸ்தானை பாராட்டுவதில் தவறில்லை ஆனால் தமிழ்நாட்டை ஏன் குறை சொல்லவேண்டும். ஒரு வருட தண்டனை இவனுக்கு போதவே போதாது.
கட்டிங் போடாம சோறு இறங்காது😛. என்ன செய்ய?
சட்டம் தன் கடமையை தாமதமாக (சித்தது வழக்கில் மிக மிக தாமதம்) செய்தாலும், சரியாக செய்தது. என்ன, தண்டனை முன்பே கொடுத்திருக்கவேண்டும், மேலும் அதிக வருடங்கள் சிறை வாசம் என்று தண்டனை கொடுத்திருக்க வேண்டும். 34 வருடம் எடுத்துக்கொண்டு, ஒரே ஒரு வருடம் சிறை தண்டனை அறிவித்தது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
DEPUT DAY அப்படித்தான் இருக்கும். பழகிக்கொள்வான் பக்கிரி. இன்னும் 364 நாட்கள் கழித்து வரும்போது.. அவனுக்கு அவன் வீடும் அப்படித்தான் இருக்கும்.
சித்து பாவம். கோபத்தில் ஒருவரை குத்த, போய் அவர் இறக்க கொலை பழி... அருமையான கிரிக்கெட் வீரர். அருமையான வருணையாளர். அரசியலில் சரி இல்லை. இந்த நிலை கொடுமை.