பிரதமர் மோடி 26ல் சென்னை வருகை; பாதுகாப்பு படை ஆய்வு
சென்னை-பிரதமர் நரேந்திர மோடி, வரும் 26ம் தேதி சென்னை வருகிறார். அதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள், நேற்று சென்னையில் ஆய்வு செய்தனர்
.தமிழகத்தில், பல்வேறு சாலை திட்டங்கள் மற்றும் ரயில்வே திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, சென்னை வருகிறார். வரும் ௨௬ம் தேதி மாலை ஹைதராபாதில் இருந்து, தனி விமானத்தில் புறப்பட்டு, மாலை 5:30 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அவருக்கு பா.ஜ., சார்பில் உற்சாகவரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கிருந்து ஹெலிகாப்டரில், ஐ.என்.எஸ்., அடையாறு செல்கிறார். அங்கிருந்து, காரில் விழா நடக்கும், நேரு விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். விழா முடிந்ததும், காரில் ஐ.என்.எஸ்., அடையாறு வருகிறார். அங்கிருந்து இந்திய விமானப் படை ஹெலிகாப்டரில், இரவு 7:40 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் செல்கிறார். விமானப் படை விமானத்தில் டில்லி செல்கிறார்.
பிரதமரின் பயணம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள், நேற்று மாலை சென்னை வந்தனர். சென்னை பழைய விமான நிலையத்தை ஆய்வு செய்தனர்.

வாசகர் கருத்து (11)
கருப்பு பலூன் வித்தைக்காரர் எங்கே ?
....
உங்களால் தமிழர்களுக்கு ஒரு உதவியும் இல்லை. பின் எதற்கு எங்களை கருப்பு கொடி காட்ட நிர்பந்திக்கிறீர்கள் ???
அடுத்ததாக நமது பலமொழி பன்னாட்டு பாடகர், எல்லா கருவி இசைகலையையும் கற்ற மாபெரும் இசை அமைப்பாளர், மாறுவேஷம் அணிந்து எல்லா மாநில மக்களையும் கவர்ந்தவர் மற்றும் மூச்சு விடாமல் பொய்பேசும் வித்தகர் இப்பொழுது நம்மை எல்லாம் ஆத்திசூடியை டிஜிட்டல் இசையில் பாடி மகிழவைப்பார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்ளுகிறோம்.
உங்களுக்கு தெரியாததா... தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமையை வடநாடு மற்றும் உலகமே எள்ளி நகையாடிக் கொண்டு இருக்கிறது... தரவிடன்னு சொல்லும் அரசின் முதலைமைச்சர்தான் தெலுங்குகரர், நாங்கள் prime ஏரியா சென்னைதான் எங்கள் இருப்பிடம்... பிட்டு பாத்து படிக்கும் அளவுக்கு நாங்கள் ஒன்றும்....