திராப்: வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
அருணாச்சல பிரதேசம் சென்றுள்ள பா.ஜ., மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, திராப் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடத்தின் பொன் விழா நிகழ்ச்சியில் பேசியதாவது:கடந்த 2014 முதல் 2021ம் ஆண்டு காலத்தில் வடகிழக்கு மற்றும் டில்லிக்கு இடையே இருந்த பிரச்னைகளை பிரதமர் மோடி தீர்த்து வைத்தார். வடகிழக்கு மாநிலங்களில் பேசப்படும் மொழிகள் குறித்து யாரும் கவலைப்படவில்லை. ஆனால், அந்த மொழிகளுக்கு பிரதமர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். போடோலாந்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் இடையிலான எல்லை பிரச்னைகளில் 60 சதவீதத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
ஆமாம். அங்கே போய் அப்பிடித்தான்பேச முடியும். உ.பி வளர்ச்சியைப் பத்தியா பேசமுடியும்?
மற்ற எந்த மாநிலங்களை பற்றியும் எங்களுக்கு அக்கறையேயில்லை என்கிறாரோ? போகிற இடங்களிலெல்லாம் இந்த மாதிரிதானே சொல்றீங்க
'இலக்கு' ங்கிறீங்க....'திட்டம்' ங்கிறீங்க....இருபத்தஞ்சி வருஷ பட்ஜெட்டு போட்டாச்சிக்கிறீங்க....முப்பது ஆண்டுகளில் அது/இது கிடைக்கும்....ஐம்பது ஆண்டுகளில் நாட்டில் வறுமை இல்லாமல் போகுங்கிறீங்க .... இதையெல்லாம் கேட்டுக்கிட்டேதான் இருக்கோம்......என்னது.... வடகிழக்கு மாநில மொழிகளிகளுக்கு முக்கியத்துவமா?....எங்கே? எந்த வகையில்? என்ன முறையில்?....புதிய கல்விக்கொள்கை வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரத்தை அழித்துவிடுமய்யா....
அய்யா அமீது. நீங்க சொல்றதை பார்த்தா பீஜேபீ ஆளாத மத்த மானிலங்களின்
வளர்ச்சிக்கெல்லாம் இலக்கு இல்லையா? இடத்துக்கேத்த மாதிரி பேசறிங்களே./
அதா புரூடா விடியல் டுமீல்நாடு நம்பர் வன் வளர்ச்சி அடைஞ்சிருச்சின்னு சொல்லிட்டாரே இனி எதுக்கு
ஆமாம், வட இந்தியாவையும், கிழக்கு இந்தியாவையும் வளர்த்தாகி விட்டது, இன்னும் வடகிழக்கு இந்தியா தான் பாக்கி இருக்கிறது. இந்த நாடு இன்னுமா இவர்களை நம்பிக் கொண்டு இருக்கிறது?
ஆமாம். அங்கே போய் அப்பிடித்தான்பேச முடியும். உ.பி வளர்ச்சியைப் பத்தியா பேசமுடியும்?