ADVERTISEMENT
புதுடில்லி: ஆன்லைன் வாயிலாக நடந்த, செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் தொடரில், உலக சாம்பியன் கார்ல்சென்னை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
16 வீரர்கள் பங்கேற்கும் செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடக்கிறது. 5வது சுற்றில், சென்னையை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் 1 வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காயுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 40 வது நகர்த்தலின் போது வெற்றியை னை் வசமாக்கினார். இந்த வெற்றி மூலம் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறார்.

11ம் வகுப்பு தேர்வு என்பதால், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
இதற்கு முன்னர், பிப் மாதம் ஆன்லைன் வாயிலாக டந்த ஏர் திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் 8 வது சுற்றில் கார்ல்சனை, 16 வயது நிரம்பிய பிரக்ஞானந்தா தோற்கடித்திருந்தார்.

வாழ்த்துகள்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படவேண்டிய தருணம்.