ADVERTISEMENT
சென்னை: குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் 12ல் திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே வரும் 24ம் தேதி அணையை திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம்மே 19), அணைக்கு வினாடிக்கு, 29 ஆயிரம் கனஅடியாக இருந்தது, நேற்று மாலை, வினாடிக்கு, 47 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதனால், அணை நீர்மட்டம், 113.66 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு, 83.71 டி.எம்.சி.யாக இருந்தது. குடிநீருக்கு வினாடிக்கு, 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், மேட்டூர் அணையை, குறுவை சாகுபடிக்காக வரும் 24 ம் தேதி திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்கூட்டியே அணை திறக்கப்படுவதால் டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம்மே 19), அணைக்கு வினாடிக்கு, 29 ஆயிரம் கனஅடியாக இருந்தது, நேற்று மாலை, வினாடிக்கு, 47 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதனால், அணை நீர்மட்டம், 113.66 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு, 83.71 டி.எம்.சி.யாக இருந்தது. குடிநீருக்கு வினாடிக்கு, 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தான் உண்மையான ஸ்டிக்கர் ஒட்டும் வேலை.. இப்போ அடிச்சிக்கிட்டு இருக்கும் மழையால் நீர் வரத்து அதிகரித்து ஜுன் 12க்குள் மேட்டூர் அணை நிரம்பும் அபாயம் உள்ளது... அதுக்கு திறந்தா பேர் கிடைக்காதுன்னு முன்கூட்டியே திறக்கறானுவ...