வீட்டை குளிர்ச்சியாக மாற்றும் புரோர்தர்ம் பிளாக் கற்கள்
வீட்டு கட்டுமான செலவுகளை குறைக்க இன்று பலவிதமான மாற்று கட்டுமானப் பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் புரோர்தர்ம் பிளாக். இது செங்கல்லுக்கு நல்ல மாற்றாக பயன்படுவதால் ஸ்மார்ட் செங்கல் என்றும் அழைக்கப்படுகிறது.
இரு வகை புரோர்தர்ம் கற்கள்
புரோர்தர்ம் வெய்னர் பெர்ஜர் என்ற ஆஸி., நிறுவனத்தின் ஹாலோ பிரிக்ஸ் வகை கட்டுமான பொருள் தான் தர்பூசணி பழத்தின் நுட்பம் போல் இந்த செங்கல் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தர்பூசணி மேற்புறம் இளம் சூட்டுடன் இருக்கும் அதன் உட்பகுதி குளிர்ச்சியானதாக இருக்கும். அது போலவே இந்த கட்டுமான கற்களும் வீட்டின் உட்பகுதியை குளிர்ச்சியாக வைத்திருக்கும். களிமண்ணில் இந்த வகை கற்கள் தயாரிக்கப்படும். இந்த வகை கற்களுக்கு துளைகள் உண்டு. படுக்கை வசம் துளையிட்ட கற்கள், மேற்புறம் துளையிட்ட கற்கள் என இரு வகைகள் உள்ளன.
சுற்றுச் சூழலுக்கு ஏற்றது
இது பாரம்பரிய செங்கற்களை விட 60 சதவீதம் எடை குறைவானது. அதனால் இதை கையாள்வது எளிது. கட்டுமான நேரம் குறைவாகும். வெப்பம் தாங்கும் வகையில் பாரம்பரிய செங்கலை விட 45 சதவீதம் நல்லது. இது சுற்றுச் சூழலுக்கு ஏற்ற கட்டுமான பொருள். இந்திய பசுமை கட்டட கவுன்சிலும் ஒப்புதல் பெற்றது. இந்த கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்பட்ட கட்டடங்களில் துளையிடுவது எளிது. வீட்டுக்குள் ஏசி, எலக்ட்ரிக்கல்ஸ், உள் அலங்காரம் வேலைகளை செய்வது எளிது. புரோர்தர்ம் பிளாக் கட்டுமான கற்களை பயன்படுத்தி பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதனால் இந்த கட்டுமான செங்கல் கட்டுமானம் போல் உறுதியாகவும், தரமாகவும் இருக்கிறது. புரோர்தர்ம் பிளாக் கட்டுமான கற்களை பொறுத்தவரை மரபு கட்டுமான கற்களிலிருந்து மாறுபட்டது இதற்கு தனியான பொறுத்தும் உபகரணங்கள் உள்ளன. இந்த தொழில்நுட்பம் இந்தியாவுக்கு புதிது என்பதால் இது குறித்து விளக்க நிபுணர்களையும் தயாரிப்பு நிறுவனங்கள் வைத்துள்ளன. இது போல் காலத்திற்கு ஏற்ப அறிமுகமாகும் கட்டுமான பொருட்களை பயன்படுத்துவது நல்லது. இதனால் கட்டுமான வழக்கமான பொருட்களை வாங்குவதற்கான செலவு குறையும். புரோர்தம் தவிர ஜல்லி கற்கள், டைல்ஸ் என மாற்று கட்டுமான பொருட்களை பயன்படுத்தலாம். ரெடி மேட் கதவு, ஜன்னல்களை வாங்கியும் விரும்பிய வகையில் பொருத்தி வைக்கலாம் என்கிறார்கள் கட்டுமான வல்லுனர்கள்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!