ADVERTISEMENT
பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், அன்பழகன், சம்பத் உள்ளிட்டோர் அடங்கிய குழு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸை சந்தித்து ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டனர்.இது குறித்து, பா.ம.க., மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அதில், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
டவுட் தனபாலு: தி.மு.க.,வுக்கு உங்க ஆதரவு தேவையில்லை... நீங்க தனியா நின்னாலும் ஜெயிக்க போறதில்லை... அதனால, 'சும்மா' கிடக்கிற ஆதரவை, அ.தி.மு.க.,வுக்கு குடுத்துட்டு, நாளைக்கு அன்புமணியின் ராஜ்யசபா பதவி முடியுறப்ப இதை சொல்லியே, எம்.பி., சீட் வாங்கிடலாம் என்ற தொலைநோக்கு திட்டமா இருக்குமோன்னு, 'டவுட்' எழுது!
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிற்றரசு: கொலை குற்றவாளி பேரறிவாளனை கொண்டாடும் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை, என் மனம் ஏற்கவில்ல. எனவே, நான் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன்.
டவுட் தனபாலு: சபாஷ்... காங்கிரசிலும் சிலருக்கு மானம், ரோஷம் இருப்பதை நிரூபித்து விட்டீர்கள்... ஆனா, இதேபோல மாநில காங்., தலைவர் அழகிரியும் செய்தார் என்றால், காங்., வரலாற்றில் கண்டிப்பாக இடம் பிடிப்பார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி: முகலாயர்கள், ஆங்கிலேயர்களால் செய்ய முடியாததை, அம்பேத்கர் பெயரில் அரசியல் நடத்தும் திருமாவளவன் போன்றவர்கள் செய்ய முயற்சிக்கின்றனர். சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறும் அரசியல் ஆதாயத்திற்காக, மாட்டுக்கறியை ஆதிதிராவிட மக்களின் உணவாக முத்திரை குத்த முயற்சிக்கின்றனர். இவர்களின் அரசியல் பிழைப்புக்கு, அம்பேத்கரை துணைக்கு அழைப்பது வேடிக்கை. போலி அம்பேத்கரியவாதிகளிடம், ஆதிதிராவிட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
டவுட் தனபாலு: அருமை... மாபெரும் தேசிய தலைவரான அம்பேத்கரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்து, மலிவான அரசியல் செய்யும் இவர்களை தோலுரித்து காட்டிய உங்களை, 'டவுட்'டே இல்லாம எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

தேசிய தலைவரான அம்பேத்கரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்து, மலிவான அரசியல் செய்யும் இவர்களை தோலுரித்து காட்டிய உங்களை, 'டவுட்'டே இல்லாம எவ்வளவு பாராட்டினாலும் தகும்- சபாஷ்