Load Image
dinamalar telegram
Advertisement

அதிகாரியிடமே பேரம் பேசிய புரோக்கர்!

Tamil News
ADVERTISEMENT
''சம்பந்தம் இல்லாம மூக்கை நுழைச்சு, மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க...'' என, நாளிதழை மடித்தபடியே பேச்சை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சென்னை - திருத்தணி நெடுஞ்சாலையில, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம்ல மேம்பாலம் கட்டும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை செய்யுதுங்க... மூணு வருஷமா ஜவ்வா இழுக்கிறதால, அந்தப் பகுதி மக்கள் அவதிப்படுறாங்க...

''பொதுவா, இந்த மாதிரி பாலம் கட்டுற இடத்துல இருந்து மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை அகற்றி, வேறு இடத்துல வைக்கிற பணியை மின்வாரியம் தான் செய்யும்... அதுக்கான செலவை, நெடுஞ்சாலைத் துறை குடுத்துடும்..

.''ஆனா, பட்டாபிராம் மேம்பால பணியில, நெடுஞ்சாலைத் துறையின் மின்வாரிய பிரிவை வச்சே இந்த வேலைகளை செய்ய திட்டமிட்டாங்க... இதுக்காக, மின் வாரியத்திடம் திட்ட மதிப்பீட்டை மட்டும் கேட்டாங்க...

''மேம்பாலத்துல இருந்து 2 கி.மீ., நீளத்துக்கு உள்ள மின் இணைப்புகளை பூமிக்கு அடியில பதிக்க 4 கோடி ரூபாய் செலவாகும்னு மின்வாரியம் மதிப்பீடு செஞ்சதுங்க... இதே வேலையை, மின் கம்பம் நட்டு பூமிக்கு மேல செஞ்சா, 1 கோடி ரூபாயோட முடிஞ்சிடுமாங்க...

''நெடுஞ்சாலைத் துறையில 4 கோடி ரூபாய் ஒதுக்க அனுமதி கிடைக்காததால, பாலம் கட்டுற பணி இன்னும் இழுத்துட்டு போகுது... இதனால, 'மின் வாரியத்திடமே பணியை ஒப்படைச்சிடலாமா'ன்னு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் யோசிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''ம.தி.மு.க., தலைமை நிலைய செயலரா, வைகோ மகன் துரையை நியமிச்சாங்கல்லா... அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, மூத்த மாவட்டச் செயலர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் பலர் கட்சிக்குள்ளயே அதிருப்தியாளர்களா செயல்படுதாவ வே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவியே அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சில மாவட்டச் செயலர்கள், ம.தி.மு.க.,வை தி.மு.க.,வுடன் இணைக்க திரைமறைவுல காய் நகர்த்துதாவ... ம.தி.மு.க., அதிருப்தியாளர்கள் சேர்ந்து, இலங்கை தமிழர்களுக்கான நிவாரண தொகையை முதல்வரிடம் அளிக்க தேதி கேட்டிருக்காவ... ''அப்ப, நிவாரண நிதி வழங்குற மாதிரி திமு.க.,வுல ஐக்கியமாகவும் ஐடியா கேட்க போறாவளாம் வே...'' என்றார், அண்ணாச்சி.

உடனே, ''ஒரு அதிகாரியை பார்த்து அப்படி கேட்கலாமா ஓய்...'' என, 'சஸ்பென்ஸ்' வைத்த குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''சென்னை, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஆய்வு செய்றதுக்காக, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ் சமீபத்துல வந்தார் ஓய்...

''ஆபீஸ் வாசல்ல தனியா வந்தவரை, யாருன்னு தெரியாம, பிரபாகர்ங்கிற புரோக்கர் சுத்தி சுத்தி வந்திருக்கார்... 'ஆபீஸ்ல எல்லாம் நம்மாளுங்க தான்... என்ன வேணும் சொல்லுங்கோ... ஈசியா முடிச்சிடலாம்'னு உளறி கொட்டிண்டார் ஓய்...

''டென்ஷனான மேனுவல் ராஜ், கோட்டாட்சியர் அறிவுடை நம்பியை கூப்பிட்டு செம, 'டோஸ்' விட்டிருக்கார்... புரோக்கர் பிரபாகர் மேல, தாம்பரம் போலீஸ் ஸ்டேஷன்ல தாசில்தார் பாலாஜி புகார் குடுத்தார் ஓய்...

''சாதாரண பிரிவுல தான் வழக்கு பதிவு செஞ்சிருக்கா... பிரபாகர் மேலயும் நடவடிக்கை இல்லை... பிரபாகரை விசாரிச்சா, யார் யாருக்கு, எவ்வளவு போறதுன்னு புட்டுபுட்டு வச்சுடுவாரோல்லியோ... அதனால, புகார் மீது நடவடிக்கை கேட்டு போலீசாரை நச்சரிக்காம, அதிகாரிகளும் அடக்கி வாசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிய, பெஞ்ச கலைந்தது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • haridoss jennathan - VELLORE,இந்தியா

    ....

Advertisement