Load Image
dinamalar telegram
Advertisement

மொழியை வைத்து சர்ச்சை உருவாக்க முயற்சி: பிரதமர்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: கடந்த சில நாட்களாக மொழியை வைத்து சர்ச்சைகளை கிளப்பும் முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் நடக்கும் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மோடி பேசியதாவது: ஜனசங்கம் இருந்த போது, நம்மை பற்றி பலருக்கு தெரியாது. தேசத்தை கட்டமைக்கும் கொள்கையை நமது தொண்டர்கள் ஏற்று கொண்டனர். அதிகாரத்தில் இருந்து நாம் நீண்ட தொலைவில் இருந்தாலும், நமது தொண்டர்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருந்தனர். முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க பிரச்னைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்பும் வகையிலான சுற்றுச்சூழலை முற்றிலும் ஆராய்ந்து கொண்டிருக்கும் கட்சிகள் இருப்பதை நாம் பார்க்கிறோம். அவர்களிடம் இருந்து நாம் கவனமாக இருக்க வேண்டும்.
Latest Tamil Newsகடந்த சில நாட்களாக மொழியை வைத்து சர்ச்சைகளை கிளப்பும் முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். ஒவ்வொரு பிராந்திய மொழிகளையும் இந்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பாகவும், வணங்குவதற்கு மதிப்புள்ளதாக பா.ஜ., கருதுகிறது. புதிய தேசிய கொள்கையில், அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மொழிகளை, நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கான இணைப்பாக பா.ஜ., கருதுகிறது. சுதந்திரம் அடைந்த பிறகு, குடும்ப கட்சிகள் ஊழல், மோசடி என நாட்டின் மதிப்பு மிக்க நேரத்தை வீணடித்துள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (63)

 • அப்புசாமி -

  இதையெல்லாம் நமது முன்னோர்கள் ரூவாய் நோட்டிலேயே அனைத்து மொழிகளிலும் அச்சடிச்சு எல்கா மொழிகளும் சமம்னு காட்டிட்டாங்க. இவுரு ஏதோ இவர் ஆட்சிக்கு வந்தப்புறம்தான் எல்லா மொழிகளுக்கும் சம அந்தஸ்து குடுக்கற மாதிரி பேச்சு. அமித்ஷா மூலம் இந்தியைத் திணிக்க முயற்சி. இவரு ரொம்ப நல்லவர் மாதிரி வடை சுட முயற்சி.

 • sankar - சென்னை,இந்தியா

  இந்த தப்பை நீங்க தானே செய்றீங்க.

 • chennai sivakumar - chennai,இந்தியா

  மொழியை வைத்து அரசியல் செய்வது உங்கள் அலுவலகம் மட்டுமே. இது போல ஏதாவது கிளப்பி விட்டு மக்கள்.கவனத்தை திசை திருப்புவது எல்லா அரசியல் கட்சி களுக்கும் கை வந்த கலை. ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தி என்று திரு. ஸ்டாலின் சொன்னாரா அல்லது திரு. பொம்மை சொன்னாரா? யார் சொன்னது என்று தங்களுக்கே தெரியும். பாலுக்கும்.காவல் பூனைக்கும் தோழன் என்பது போல இருக்கிறது தங்களுடைய அறிக்கை. ஒழுங்காக இருந்த ஆங்கில இரயில்வே website இல் ஹிந்தி புகுத்த முயற்சி செய்து பிறகு எதிர்ப்பால் பல்டி அடுத்தது யாரு ? Edappaadi avargalaa? சொல்லுங்க கோபால் சொல்லுங்க? ஒன்று மட்டும் உறுதியாக சொல்லுகிறேன். நீங்கள் செய்யும் நல்லது எல்லாம் இந்த மொழி திணிப்பினால் மக்கள் மறந்து உங்களை ஓரம் கட்டி விட்டார்கள், விடுவார்கள் விட்டுக்கொண்டு இருப்பார்கள். தமிழனுக்கு தாய் மொழி தமிழ் மட்டுமே தவிர link language aaga ஆங்கிலம். வேறு ஏமி லேது சார்

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  அரசின் புதிய மொழிக் கொள்கை 2020 என்பது இரு பழம் மொழிகளான சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் இடையிலான 'சபாஷ் சரியான போட்டி' அல்ல ஆங்கிலத்திற்கு ஒரு சவப்பெட்டி....கிட்டத்தட்ட இருநூற்றிப்பத்து ஆண்டுகளாக இந்திய மக்கள் பயன்படுத்திய மற்றும் பயன்பெற்ற ஏணியினை எட்டி உதைக்கிறார்கள். ஐயோ, பரிதாபம். ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக அந்நிய மொழி லிஸ்டில் சேர்த்துவிடுகிறார்கள். ஆனால் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பெரும் கல்வி களஞ்சிய நூல்களை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்து பதிப்புரிமை சட்டத்தை மீறுகிறார்கள். இப்படி எத்தனை நூல்களைத்தான் ஆங்கிலத்திலிருந்து கொள்ளையடித்து சமஸ்கிருதத்திலோ/ இந்தியிலோ மொழிபெயர்க்கமுடியும்?. ஒரு நூலின் படைப்பை அந்தந்த மொழியில்தான் படிக்கவேண்டும். அப்படி செய்துதான் சர்வதேச அளவில் இந்தியர்கள் தங்கள் திறமையை காட்டினார்கள். ஆங்கிலத்தில் சிறந்த எழுத்தாளர்கள் ஆனார்கள். நம்மை ஆண்ட ஆங்கிலேயனை வெறுக்கலாம். ஆனால் தற்போது சர்வதேச மொழியாக விளங்கும் ஆங்கிலத்தை ஆக்கிரமிப்பது முறையல்ல. ஏற்கனவே, நமது கல்வித்தரம் சர்வதேச அளவில் உயிர் ஊசலாடுகிறது. புதிய கல்விக் கொள்கையின்படி உயர்கல்வி இந்தியாவில் பயின்றால், உலகத்தில் சிறப்பான 'ஐய்வீ ' பல்கலைக்கழகங்களின் நுழைவுவாயில் வரைக்கும் தான் போகமுடியும். ஒன்றிரெண்டுபேர் உள்ளே நுழையலாம். இந்தியாவின் மொழி அரசியலில் ஆங்கிலம் பல மாநிலங்களில் கோமா நிலைக்கு போனாலும் போகலாம். புதிய கல்விக் கொள்கையை திருத்தி அமையுங்கள். அரசியலை புறம்பே தள்ளுங்கள்.... .....

 • S Bala - London,யுனைடெட் கிங்டம்

  இந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட்டு ஒரு போதும் மும்மொழி கொள்கையை கட்டாயப்படுத்த மாட்டோம், அனைத்து மாநிலங்களும் முழுமனதாக ஒப்புக்கொள்ளும் வரை அலுவலக மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்று சொல்லிவிடுங்களேன்....

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்