Load Image
dinamalar telegram
Advertisement

பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க உத்தரவு

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி : பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க உச்ச நீதிமன்றம் இன்று(மே 19) உத்தரவிட்டது.

கொரோனா ஊரடங்கின் போது பாலியல் தொழிலாளர்கள் வருமானமின்றி தவிப்பதால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடக்கோரி உச்ச நீநிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடையாள மற்றும் இருப்பிட சான்றுகள் இன்றி பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது குறித்து பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
Latest Tamil Newsஇது தொடர்பாக, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் நீதிமன்றத்தில் பதில் அளிக்கையில், 'தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் அல்லது மாநில சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகளிடம் இருந்து பாலியல் தொழிலாளர்கள் சான்றிதழ் பெற்று வந்து, யு.ஐ.டி.ஏ.ஐ.,யில் சமர்ப்பித்தால் அதன் அடிப்படையில், இருப்பிட சான்றிதழ் இன்றி ஆதார் அட்டை வழங்கப்படும்' என, தெரிவித்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: ஒவ்வொரு தனி மனிதரும் அவர்கள் செய்கின்ற தொழிலுக்கு அப்பாற்பட்டு கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டியது அவசியம். இந்த அடிப்படையில், பாலியல் தொழிலாளர்களுக்கு இருப்பிட சான்றிதழ் இன்றி ஆதார் அட்டைகளை வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (3)

  • duruvasar - indraprastham,இந்தியா

    தாலிபான் உத்ரவா ? முகத்தை மூடிக்கொண்டிஇருக்கிறார்கள்.

  • அப்புசாமி -

    அவிங்களுக்கு வேறு வேலை தர திராணியில்லாமல் தொழிலைக் கண்டிநியூ பண்ண லைசன்ஸ் குடுக்குறாங்கோ. அது சரி... இத்தனை அவிங்க ஆதார் அட்டை இல்லாமலா இருந்தாங்க்? ஆதார் இல்லாம ஒரு சிம் கார்டு கூட வங்க முடியாதே பாஸ்? ரெண்டு கோடி வேலை சூப்பரா போயிட்டிருக்கு. இதில் புதுசா வர்ரவங்க எல்லோருமே ஸ்டார்ட் அப்தான், சுயதொழில்தான். நேரு ஆட்சியில், காங்கிரஸ் ஆட்சியில் இது மாற்றியெல்லாம் உண்டோ? மகிழ்ச்சியான விஷயம் போங்கோ...

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    பான் கார்டு

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்