Load Image
dinamalar telegram
Advertisement

திமுக உடன் கூட்டணியை முறித்துக்கொள்ள தயாரா?: காங்கிரசுக்கு குஷ்பு கேள்வி

Tamil News
ADVERTISEMENT
சென்னை: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் திமுக.,வுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள காங்கிரஸ் தயாரா என பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி விடுதலை செய்தது. இதனை திமுக.,வினர் வரவேற்றனர். அதே கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, பேரறிவாளன் விடுதலை கண்டித்து போராட்டம் நடத்துகிறது. இது ஒருபுறம் இருக்க முதல்வர் ஸ்டாலினை நேற்று (மே 18) பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்தனர். அப்போது பேரறிவாளனை ஆரத்தழுவி ஸ்டாலின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Latest Tamil Newsஇந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள நடிகையும், பா.ஜ.,வின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, ‛பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் திமுக.,வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? என சவால் விடுக்கிறேன். முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரசின் நடவடிக்கை இருக்கிறது' எனக் கடுமையாக சாடியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (52)

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    எப்பவுமே கொலைகாரங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவானுங்க

  • KavikumarRam - Indian,இந்தியா

    //திமுக உடன் கூட்டணியை முறித்துக்கொள்ள தயாரா?: காங்கிரசுக்கு குஷ்பு கேள்வி// குஷ்பூ மேடம் திமுக கூட்டணி - அது வியாபாரம், கூட்டணியை முறித்துக்கொள்ள தயாரா - இது வெக்கமானம் சம்பந்தப்பட்டது. ரெண்டும் வேற வேற டிபார்ட்மென்ட். சும்மாநீங்க பாட்டுக்கு குழப்பிக்கொள்ளக்கூடாது.

  • PV -

    ஒவ்வொரு கட்சியிலும் சில ஆண்டுகள் சுகம் அனுபவித்துவிட்டு, கட்சிமாரும் உனக்கு ஏதாவது தகுதி இருக்கா கேள்விகேக்கா? அடுத்து எந்த கட்சி?

  • abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா

    எஸ் எஸ் குஷ்பூ மேடம்

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    பிரதமர் கொள்ளப்பட்டது மிகப்பெரும் வேதனைதான். மறுப்பதற்கில்லை. காங்கிரஸுக்கே பேரறிவாளன் இத்தனை வருடங்கள் சிறையில் இருந்தது உறுத்தலாக இருந்திருக்கும். 31 வருடங்கள் ...ம்ம் ... அந்த தண்டனையே போதும். தப்பிருந்தால் மனசாட்சியும் தெய்வமும் தண்டிக்கும். மனிதர்கள் என்கிற முறையில் இது மனநிம்மதி பெரும் விஷயமே. அரசியலுக்காக மனிதாபிமானத்தை மறந்து உசுப்பிக்கொண்டிருக்க கூடாது. அதுவும் இந்த நடிகை வாயை திறந்திருக்கவே கூடாது.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்