Load Image
Advertisement

கோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின்

 கோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின்
ADVERTISEMENT

கோவை: கோவை மாநகரை மேம்படுத்த மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில்முனைவோர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்தப்பிறகு 5 முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியுள்ளோம். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 69 ஆயிரம் கோடிக்கு 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தெற்காசியாவிலேயே முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என செயலாற்றுகிறோம். தமிழகத்தில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான முயற்சிகளில் ஈடுபட தொழில்முனைவோரை கேட்டுக் கொள்கிறேன்.


நமது மாநிலம் தொழில்வளர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழவேண்டும். கோவை மாநகரை மேம்படுத்த மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும். சென்னைக்கு அடுத்ததாக தகவல் தொழில்நுட்பத்துறையிலும் கோவை வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு தொழில்களின் மையமாக கோவை விளங்குகிறது. கோவை பாரதியார் பல்கலையில் அறிவுசார் பூங்கா அமைக்கப்படும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் தொழில்துறையை காக்க தனி கவனம் செலுத்தப்படுகிறது. தமிழக அரசு லட்சியத்தை அடைய கோவையின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

Latest Tamil News
கயிறு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பருத்தி மற்றும் நூல் நிலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பட்டறைகள் உருவாக்கப்படும். ரூ.218 கோடி மதிப்பில் 4 தொழிற்பட்டறைகள் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. சிலுவம்பாளையத்தில் தனியார் பங்களிப்புடன் தொழிற்பட்டறை உருவாக்கப்படுகிறது. அரசின் வாய்ப்புகளை தொழில்துறையினர் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (25)

  • Senthil kumar - coimbatore,இந்தியா

    அரசியல் வியாதிகள் கால் வைக்காமல் இருந்தாலே போதும், கோவை அதனுடைய முன்னேற்ற பாதையில் தானகவே செல்லும்.

  • தமிழ்மணி. கோவன்புத்தூர். - ,

    கொங்குமண்டலம் டெவலப் ஆகுறதுக்கு ஒரு வழியிருக்கு! தயவுசெய்து ஆட்சிமுடியும்வரை கோபேக்! கொங்கு மக்கள் உழைப்பாளிகள், தாங்கள் எப்படி வளரவேண்டும் என்று திருட்டு திராவிடர்களின் பாடத்தை கேட்க வேண்டிய அவசியமில்லை!

  • ... - ,

    எல்லா ப்ளானும் பேப்பர்ல மட்டும் தான் இருக்கும்... கேட்டா தேதி போட்டு இருக்கான்னு கேப்பாங்க...

  • ... - ,

    திட்டம் எல்லாம் பல ஆயிரம் கோடி... ஒதுக்கின து பல நூறு கோடி... யார் யாருக்கு எவ்வளவு ஒதுக்கின து ன்னு தெரியல...

  • ... - ,

    புரிந்துணர்வு ஒப்பந்தம் யார் யார் கூட போட்டிங்க... கொஞ்சம் விவரமா சொல்லு ங்க..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்