Load Image
dinamalar telegram
Advertisement

எப்பங்க போடுவீங்க ரோடு?  ஜூனில் மழை வலுக்கப்போகிறது...  சகதியால் சாலை வழுக்கப்போகிறது!

Tamil News
ADVERTISEMENT

கோவை : கோவை - பொள்ளாச்சி மெயின் ரோட்டின் குறுக்கே ஆறு இடங்களில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்க மறுப்பதால், திட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் பணிகள் முடிந்த குறுக்கு வீதிகளிலாவது, மழை வலுக்கும் முன் சாலை போட வேண்டும்.கோவை மாநகராட்சி பகுதியில், குறிச்சி மற்றும் குனியமுத்துார் பகுதியில், ரூ.591.34 கோடியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 87 முதல், 100வது வார்டு வரை, 14 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.பிரதான ரோடு, குறுக்கு வீதிகளில் குழாய் பதிப்பது, சேம்பர் கட்டுவது, 'பம்ப்பிங் ஸ்டேஷன்' அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தின் ஒரு பகுதியில், சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது. கடந்த ஜன., மாதத்துக்குள் இப்பணியை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக, பணிகள் முடங்கின. அதனால், 2023 மார்ச் மாதத்துக்குள் முடிக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.


என்றாலும், ஆத்துப்பாலத்தில் இருந்து ஈச்சனாரி வரை, 6.8 கி.மீ., துாரத்தில், 3.8 கி.மீ.,க்கு பிரதான ரோட்டில், பாதாள சாக்கடை குழாய் பதிக்க வேண்டியிருக்கிறது.இதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஈச்சனாரி பகுதியில் மட்டும் குழாய் பதிக்க, ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், மெயின் ரோட்டை தோண்டக் கூடாது; இருபுறமும் உள்ள மண் ரோட்டில் குழாய் பதிக்க அறிவுறுத்தி, குடிநீர் வடிகால் வாரியம் சமர்ப்பித்த கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளனர்.இதுபோல், ஐந்து முறை கோப்பு திரும்பி வந்திருக்கிறது. மண் ரோடே இல்லாத அளவுக்கு எல்லை வரை தார் ரோடு போடப்பட்டு இருப்பதை புகைப்பட ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி, தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டல அலுவலகத்துக்கு மீண்டும் கோப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தற்போது, ரோட்டை தோண்டாமல், போக்குவரத்துக்கு பாதிப்பின்றி, துளையிட்டு குழாய் பதிக்க, அனுமதி கோரப்பட்டுள்ளது.இது தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறியதாவது:குறிச்சி, குனியமுத்துார் என இரு பிரிவாக பிரித்து பாதாள சாக்கடை திட்ட பணிகள் செய்யப்படுகின்றன. சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி, 99 சதவீதம் நிறைவடைந்து, போத்தனுார் பகுதியில், 3,000 வீடுகளுக்கு இணைப்பு வழங்கியிருக்கிறோம்.பரிசோதனை முறையில் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கி வருகிறோம். குழாய் பதிப்பது, சேம்பர் கட்டுவது உள்ளிட்ட பணிகள், 70 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது.பொள்ளாச்சி மெயின் ரோட்டில் குழாய் பதிக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்க மறுத்து வருகிறது; மீண்டும் கோப்பு அனுப்பியிருக்கிறோம்.ஈச்சனாரி அருகே குழாய் பதிக்க ஆணையம் அனுமதி கொடுத்திருப்பதால், ஒரு மாதத்தில் வேலை துவங்கும். மொத்தம், 30 இடங்களில் 'பம்ப்பிங் ஸ்டேஷன்' கட்ட வேண்டும்; 25 இடங்களில் முடிந்து விட்டது.கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பதால், சில இடங்களில் இன்னும் கட்ட முடியாத சூழல் தொடர்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.சுந்தராபுரம் குறுக்கு வீதிகள்

குறுக்கு வீதிகளில் குழாய் பதிக்க தோண்டிய இடங்களில் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சுந்தராபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் குறுக்கு வீதிகள் அதிகமாக இருக்கின்றன.குடிநீர் திட்ட குழாய், பாதாள சாக்கடை திட்ட குழாய், காஸ் குழாய் பதிப்பதற்காக, வெவ்வேறு குழுவினர் தொடர்ச்சியாக, ரோட்டை ஆங்காங்கே தோண்டியிருக்கின்றனர். அதனால், எந்த வழித்தடத்தில் சென்றாலும், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால், மக்கள் படும் அவஸ்தைக்கு அளவில்லை. மழை காலம் துவங்கி விட்டதால், ரோடு இனி சேறும் சகதியுமாகி விடும். நடந்து செல்லக்கூட முடியாத அவலம் ஏற்படும். வாகனத்தில் செல்வோர் வழுக்கி விழக்கூடிய சிக்கல் இருக்கிறது. எனவே, குழி தோண்டிய இடங்களில் ரோடு போடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (4)

 • N Sasikumar Yadhav -

  ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து அவங்க ரோடூப்போடுவாங்கலாம் இவங்க போட்ட ரோட்டிலேயே கமிஷன் அடிக்க அந்த ரோட்டை தோண்டுவார்களாம்

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  ரோடா.. ரோடுவேணும்னா கேக்கிறீங்க.. வெரி..சாரி.. ஒரு காலத்திலே கமிஷன் 30% போக மீதிக்கு ரோடு போட்டுண்டு இருந்தோம். இப்பஇப்ப போடாமலே போட்டதாக கணக்கு மட்டுமே காட்டுவோம்.. எட்டு வருஷமா போடாத ரோடுகளும் சென்னை தாம்பரம் பகுதிகளில் உண்டு..

 • Sivagiri - chennai,இந்தியா

  கிரேஸிமோஹன் டைப் கமெண்டுகளை அரசியலில் தவிர்ப்பது நல்லது ,

 • duruvasar - indraprastham,இந்தியா

  ரோடு ஓரத்தில் பதிந்தால் கடைகாரங்ககளுக்கு வேலை முடியும் வரை வியாபாரம் பாதிக்கும். எனவே காண்டிராக்ட்டர் நடுரோட்டை தோண்டவேண்டும் என்கிறார். . இருக்கவே இருக்கிறது மத்திய துறை மீது பழியை போட்டுவிடலாம்.

Advertisement