பல கோடி ரூபாய் ஒதுக்கியும் பயனில்லை? டஞ்சன் ரோடுகளை சீரமைக்காமல், பொறியியல் பிரிவினர் கொர்ர்
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரோடுகள் சீரமைக்க பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், பல பகுதிகளில் ரோடுகள் குண்டும், குழியுமாக பரிதாபமான நிலையில் காணப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில், தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளும், மாநகராட்சி ரோடுகளும் அமைந்துள்ளன.
முக்கிய ரோடுகள், பிரதான வீதிகள், குறுக்கு தெருக்கள், சந்துகள் என பல விதமான ரோடுகள் உள்ளன.மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான ரோடுகள் குடிநீர் குழாய்கள் உடைப்பு காரணமாக சேதம் அடைந்துள்ளன. முக்கிய ரோடுகளில் பாதாள சாக்கடை திட்டம், 4 வது குடிநீர் திட்டப் பணிகள் குழாய் பதிப்பு போன்ற பணிகள் காரணமாக பெருமளவு சேதமடைந்துள்ளன.
குண்டும் குழியுமாகவும், பல இடங்களில் பல அடி நீளம் மற்றும் ஆழத்துக்கு பள்ளமாகவும் மாறி கிடக்கின்றன.இவற்றில், அனைத்து பகுதிகளிலும் குழாய் பதிப்பு பணி நிறைவடைந்தும், அவை சரி செய்யப்படாமல் மாதக்ககணக்கில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் சிரமம் நிலவுகிறது.
மோசமான நிலையில் உள்ள ரோடுகளில் பயணிக்கும் போது வாகனங்கள் பழுதடைவதும், அவற்றில் செல்வோர் உடல் நிலை பாதிக்கப்படுவதும் தவிர்க்க முடியாததாக உள்ளது.இது குறித்த தொடர் புகார்களின் பேரில், சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதனால், நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் பணி திட்டமிடப்பட்டது.
இதில் 13 கி.மீ., நீளத்துக்கு 51 இடங்களில் ரோடு சீரமைக்க திட்டமிடப்பட்டது.மேலும் 15வது மானியக்குழு திட்டத்தில் 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 108 கி.மீ., நீளத்துக்கு, 219 பகுதிகளில் ரோடு சீரமைக்கவும், 34 கோடி ரூபாய் மதிப்பில் 94 கி.மீ., நீளத்துக்கும் ரோடுகள் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால், பெரும்பாலான ரோடுகள் இன்னும் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படவில்லை. லேசான மழை பெய்தால் கூட ரோடுகள் அரிக்கப்பட்டு, குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது.
வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவது தவிர்க்க முடியாமல் உள்ளது.மாநகராட்சி பொறியியல் பிரிவினர் கூறுகையில், 'அதிக பயன்பாடு கொண்ட பிரதான ரோடுகள் முதல் கட்டமாக முன்னுரிமை கொடுத்து பணி நடைபெற்று வருகிறது. சிறிய மற்றும் குடியிருப்பு பகுதி ரோடுகள் அடுத்தடுத்து சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். விரைவில் அனைத்து ரோடுகளும் சீரமைக்கப்பட்டு விடும்,' என்றனர்.ேசான மழை பெய்தால் கூட ரோடுகள் அரிக்கப்பட்டு, குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வாசகர் கருத்து (3)
சில நாட்களுக்கு முன்னர் கருநாடக சாலையை கிண்டல் செய்த திமுகவினர் எங்கேப்பா?
இதுதாண்டா திராவிட மாடல் - விரைவில் வெளிவர இருக்கும் தமிழ் திரைப்படம்.
பல கோடி ரூபாய் ஒதுக்கியது சரி. அதை யார் தங்கள் வங்கிக் கணக்கில் ஒதுக்கினார்களோ?