உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:
பி.கமல்பிரகாஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'காங்கிரஸ் கட்சி, தற்போது சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு, மக்கள் உடனான தொடர்பை இழந்து விட்டதே காரணம். அதனால், மக்களுடனான தொடர்பை, நாம் பலப்படுத்த வேண்டும்.
'நாடு முழுதும் உள்ள மக்களை நேரடியாக சந்திக்க, அக்டோபர் மாதத்தில் யாத்திரை நடத்தப்படும்' என, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த, காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்.

சரியான எதிர்க்கட்சியாக செயல்பட தவறியது, கட்சியில் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை, கோஷ்டி பூசல் உருவாக அனுமதித்தது, வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தியது, சிறப்பாக செயல்படும் தலைவர்களுக்கு முக்கியத்துவம் தராமல், அவர்கள் மாற்றுக் கட்சிக்கு தாவும் வகையில் செயல்படுவது என, காங்கிரசில் பல பிரச்னைகள் உள்ளன. இந்தப் பிரச்னைகளை எல்லாம் தீர்ப்பதுடன், கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி திட்டத்தையும் முழு அளவில் அமல்படுத்த வேண்டும்.
கட்சிப் பதவியில் இருப்போருக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ., பதவி வழங்கக் கூடாது. அதே நேரத்தில், எம்.எல்.ஏ., - எம்.பி., பதவிகளில், குறிப்பிட்ட சிலர் மட்டுமே, பல ஆண்டுகளுக்கு நீடிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். இது தவிர, கட்சிப் பதவிகளில் பாதிக்கும் மேற்பட்டதை, ௫௦ வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வழங்குவது பேச்சு அளவில் இல்லாமல், செயல் அளவில் இருக்க வேண்டும்.
மத்தியில், எட்டு ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. இருந்தும், கட்சியை புனரமைக்கவும், துடிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படவும், தலைவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சித் தலைமையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என, சில தலைவர்கள் சமீப நாட்களாக குரல் கொடுத்து வந்தனர். அவர்களின் குரல், உதய்பூர் கூட்டத்தில் ஓங்கி ஒலிக்கவில்லை; மாறாக அமைதியாகி விட்டது. அதனால், சோனியா குடும்பத்தினரே தலைவர் பதவியில் நீடிப்பது உறுதியாகியுள்ளது.
நாட்டில், 'எமர்ஜென்சி'யை பிரகடனம் செய்ததால், மக்களால் தோற்கடிக்கப்பட்ட இந்திரா, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமரானார். அதனால், கட்சியில் அதிரடி மாற்றங்களை கொண்டு வருவது மட்டுமின்றி, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகவும், மக்களை கவரும் விதமாகவும் செயல்பட்டால் தான், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும். இல்லையெனில், மீண்டும் ஆட்சி அதிகாரம் என்பது கானல் நீர் தான்; இந்திரா போல சாதிப்பாரா சோனியா?
வாசகர் கருத்து (22)
சோனியா காந்தி குடும்பம் தவிர வேறு ஒரு நல்ல தலைவர் ( குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சசி தரூர், சச்சின் பைலட் ) போன்றவர்கள் வந்தால் கட்சி கொஞ்சம் முன்னேறும். சோனியா குடும்ப தலையீடு அறவே கூடாது என்பதை மறக்க கூடா முக்கிய நிபந்தனை
என்று காங்கிரஸ் பேரியக்கம், தமிழகத்தில், திரு கர்மவீரர் காமராஜ் ஐயா என்று முதல்வர் பதவியில் இருக்கும் போது அதை விட்டு கட்சி பனி செய்ய போகிறேன் என்று கிளம்பினாரோ அன்றே முடிவுரை எழுதியாகிவிட்டது, பக்தவச்சலம் ஆட்சி வந்ததும் திமுக பலம் பெற்று ஆட்சியை கைப்பற்றி கொண்டது, அப்படி MGR என்ற சினிமா வெளிச்சத்தில், அதற்கு பிறகு காங்கிரஸ் திமுக போடும் பிட்சையில் வாழ்கிறது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அழிவிற்கு முக்கிய காரணம் ஒரு தேர்தலில் திருமதி.இந்திரா மற்றும் திரு.கருணாநிதி போட்ட ஒப்பந்தம் தான், அது என்ன, காங்கிரஸ் கட்சி ஒரு சட்டமன்ற தேர்தலில் நிற்காமல் இருப்பது அதற்க்கு பதிலாக நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சியை வீட காங்கிரஸ் கட்சி அதிக இடத்தில போட்டி இடுவது என்று, எண்ணிப்பார்க்கணும் காங்கிரஸ் கட்சியின் இன்றய தலைவர்கள் இதுமாதிரி எங்காவது நடக்குமா, இதை யாரும் செய்யாத காரியத்தை இந்திரா அவர்கள் செய்தார், காங்கிரஸ் அழிவு என்பது என்று இந்திரா என்ற பெண் பிரதமர் ஆகினாரோ அன்றே நடக்க ஆரம்பித்தது, திரு.காமராஜ் அவர்களை எருமை தோழன் என்று சொன்ன கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி, இந்த கூட்டணி எப்படி சத்தியம் ,தர்மம் ஆகும், காங்கிரஸ் தன்னை தானே எரித்துக்கொள்ளும்.இதற்க்கு மேலாக இவர்கள் இந்திய முழுவதும் எந்த காரியமாக இருந்தாலும் சிறுபான்மை ஆதரவு, கூட்டு ஊழல், ஜாதிய அணுகுமுறை, அரசை நடத்துவதில் தோல்வி, சிறந்த தலைவர்கள் இல்லை,மக்கள் தொடர்பு இல்லை,சீனா போர் தோல்வி,சீனா அரசுடன் மறைமுக அக்ரீமெண்ட்,இந்தியாவில் வாழ்கிறோம் என்று நினைக்காமல் மோடியை எதிர்க்கிறோம் என்று சொல்லி பாரத நாட்டை தரக்குறைவாக பேசுவது, மக்களிடம் ஆரோக்கியமான அரசியலை எடுத்து செல்லாமல் எப்ப பார்த்தாலும் எதிர்மறை கருது, எதற்கு எல்லாம் விட குடும்ப ஊழல் ஆட்சி ,காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த பத்து ஆண்டுகள் ஊழல் செய்த தலைவர்கள் இல்லை, இவர்களுக்கு மேலாக இவர்கள் சேர்த்து இருக்கும் குடும்ப ஊழல் கட்சிகள் செய்த ஊழல், எடுத்துக்காட்டு, டூ ஜி ,நிலக்கரி,காமென்வெல்த்,என்ற ஊழல் பட்டியல் தான் இன்றைய அழிவுக்கு காரணம்.தற்சமயம், வயதான பெரியவர்களை முதல்வர் ஆக்குவது, வெற்றிக்கு பாடுபட்ட இளம் தலைவர்களை ஓரம் கட்டுவது.இப்படி இருந்தால் அழிவு அழிவு தான், தமிழ்நாட்டில் செல்வப்பெருந்தகை, சிதம்பரம்,பீட்டர் ,அழகிரி,திருநாவு,தங்கபாலு,இப்படி எல்லாரும் திமுகவில் சேர்ந்து செய்தி வாசிப்பாளர் ஆகிவிட்டார்கள்.நினைத்து பாருங்கள் மக்களே, கட்சியை வளர்க்க கே பிளான் கொண்டுவந்து தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த காமராஜர் என்க நிற்கறார் மக்களின் மனதில், இப்ப பதவி சுகத்திர்ற்கு ஆசைப்பட்டு வேறு கட்சிக்கு செய்தி வாசிப்பாளராக இருக்கும் இவர்கள் என்க.
என்ன இருந்தாலும் இந்திரா காந்தி ஒரு விதத்தில் இந்தியாவுக்கு சேவை செய்தவர். குளறுபடிகள் ஆயிரம் இருந்தாலும் அவரை ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சோனியா காந்தி எந்த நிலையிலும் இந்திய நாட்டின் மீது அக்கரை உள்ளவர் போல் சரியாக காட்டிக் கொள்ளக் கூட தெரியாதவர்.இந்த லட்சணத்தில் போபர்ஸ் விவகாரம் மற்றும் குடும்ப சொத்து குவிப்பு வழக்கு என்று ஏராளம். மேலும் இத்தாலிய நாட்டின் உறவில் ஊரிப் போனவர். இவர் மீது திணிக்கப்பட்ட காங்கிரஸ் தலைமை பொறுப்பை கூட சரிவர செய்யாதவர்.தானாக முன்வந்து ஒதுங்கிக் கொள்வது தான் சரி.
கோகுல இந்திரா சோனியாவை விட அதிகம் சாதித்திருக்கிறார். அவரோடு ஒப்பிடுவது அனாவசியம்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
இந்திரா போல சாதிப்பாரா சோனியா? கொஞ்சம் எழுத்துப்பிழை???இந்திரா போல சம்பாதிப்பாரா சோனியா???இந்திரா போல வாதிப்பாரா சோனியா???இந்திரா போல பாதிப்பாரா சோனியா???என்று இருக்கவேண்டும்