ADVERTISEMENT
புதுடில்லி: பெட்ரோல் விலை, வேலையின்மை, மதவாத வன்முறை போன்றவற்றில் இரு நாடுகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியே இருப்பதாக பல்வேறு அமைப்புகளின் தரவுகளை அடுக்கி மத்திய அரசை ராகுல் விமர்சித்துள்ளார்.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி பாதித்து அத்தியாவசிய பொருட்களுக்கே பற்றாக்குறையை சந்திக்கிறது. இலங்கையின் இந்த நிலையால் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை துறந்து பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டி வந்தது. அவரது பூர்விக வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் குறிப்பிட்ட சில விஷயங்களில் இலங்கையின் தரவுகளையும், இந்தியாவின் தரவுகளையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். ”மக்களை திசை திருப்புவதால் உண்மைகளை மாற்ற முடியாது. இலங்கையின் நிலையுடன் இந்தியா பெருமளவு ஒத்துப்போகிறது.” என கூறியுள்ளார்.
அந்த தரவுகளில் வேலைவாய்ப்பின்மை, பெட்ரோல் விலை, மத மோதல்கள் ஒப்பிடப்பட்டுள்ளன. 2017 முதல் 2021 வரை வேலைவாய்பின்மை ஒரே அளவில் அதிகரித்துள்ளது. 2017 முதல் 2018 வரை இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. பின்னர் 2019ல் கணிசமாக குறைந்து அந்நாண்டு இறுதியிலிருந்து தற்போது வரை ஏறுமுகத்தில் இருப்பதை வரைபடம் காட்டுகிறது. இலங்கையில் 2018ல் ஒரு புதிய உச்சம் மற்றும் தற்போதும் புதிய உச்சநிலை எட்டி உள்ளது பெட்ரோல். மதமோதல்கள் இந்தியாவில் 2019லிருந்து அதிகரித்துள்ளதாகவும், இலங்கையில் 2017லிருந்தே அவை அதிகம் என ராகுல் பகிர்ந்துள்ள தரவுகளில் காட்டப்பட்டுள்ளது.
இந்த தரவுகளை ஏ.சி.எல்.இ.டி., எனப்படும் ஆயுத மோதல்களின் நிகழ்வுகள் குறித்த தரவு திட்டம் , ராஜ்யசபாவில் வழங்கப்பட பதில்கள், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் ஆய்வு குழு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சிலோன் பெட்ரோலிய கழகம் ஆகியவற்றிலிருந்து எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி பாதித்து அத்தியாவசிய பொருட்களுக்கே பற்றாக்குறையை சந்திக்கிறது. இலங்கையின் இந்த நிலையால் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை துறந்து பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டி வந்தது. அவரது பூர்விக வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் குறிப்பிட்ட சில விஷயங்களில் இலங்கையின் தரவுகளையும், இந்தியாவின் தரவுகளையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். ”மக்களை திசை திருப்புவதால் உண்மைகளை மாற்ற முடியாது. இலங்கையின் நிலையுடன் இந்தியா பெருமளவு ஒத்துப்போகிறது.” என கூறியுள்ளார்.

இந்த தரவுகளை ஏ.சி.எல்.இ.டி., எனப்படும் ஆயுத மோதல்களின் நிகழ்வுகள் குறித்த தரவு திட்டம் , ராஜ்யசபாவில் வழங்கப்பட பதில்கள், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் ஆய்வு குழு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சிலோன் பெட்ரோலிய கழகம் ஆகியவற்றிலிருந்து எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
இது என்ன படம்? சேது பட விக்ரம் மாதிரி?.