தங்கம் விலை தொடர்ந்து சரிவதற்கு என்ன காரணம்?
ஈரோடு : சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு கொண்டு வருவதாலும், தங்கம் விலை மீண்டும் சரிகிறது.


இந்நிலையில் அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டியை உயர்த்தி, டாலர் மதிப்பை வலுவாக்கியது. மேலும் உக்ரைன் போர் மற்றும் கொரோனா தாக்கம் ஆகியவை குறைந்ததால், தங்கம் மீதான முதலீடு சரியத் துவங்கியது. சர்வதேச முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் அதிக முதலீடு செய்து, அதிக லாபம் பெற முயல்வர். அதன்படி தங்கம் மீது முதலீட்டை குறைத்து, பிற முதலீடுகளை அதிகரித்தனர். டாலர் மதிப்பு உயர்வால் சீனா, கொரியா போன்ற பல நாடுகள், வாங்கி வைத்திருந்த தங்கத்தை விற்று வருகின்றன. இதனால் தங்கம் வரத்து அதிகரித்து, குறையத் துவங்கி உள்ளது. டாலர் மதிப்பு மேலும் உயரும்போது, தங்கம் விலை மேலும் சரியும். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!