ADVERTISEMENT
ஊட்டி : ''நம் நாட்டின் வளமான கலாசாரத்தையும், பண்பாடுகளையும் மாணவர்கள் பாதுகாக்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவுறுத்தினார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: வேகமாக மாறி வரும் இன்றைய கால கட்டத்தில், நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு மிகவும் முக்கியம். நம் தேசம் உலகின் முன்னணி நாடாக உருவெடுத்து வருகிறது. உங்கள் எதிர்காலமும், நம் தேசத்தின் எதிர்காலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது.
இளைஞர்களிடம் உள்ள திறமைகளையும், கண்டுபிடிப்புகளையும் கண்டறிந்து ஊக்கமளிக்க வேண்டும். நாட்டில், 65 சதவீதம் பேர் 50 வயதுக்கு கீழே உள்ளவர்கள். அவர்களில், 50 சதவீதம் பேர், 25 வயதுக்கு கீழே உள்ளவர்கள். அதனால், இந்தியாவின் வருங்காலம், மிகவும் வளர்ச்சிகரமாக இருக்கும்.
நம் நாட்டின் வளமான கலாசாரத்தையும், பண்பாடுகளையும் மாணவர்கள் நினைவுகூர்வதோடு அதை பாதுகாக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை தலை சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. இது, ஊரகப்பகுதி, நகரப்பகுதி என்ற வேறுபாடுகளை சரி செய்ய வழிவகை செய்யும். இவ்வாறு, வெங்கையா நாயுடு பேசினார்.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித், பள்ளி தலைமையாசிரியர் பிரபாகரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: வேகமாக மாறி வரும் இன்றைய கால கட்டத்தில், நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு மிகவும் முக்கியம். நம் தேசம் உலகின் முன்னணி நாடாக உருவெடுத்து வருகிறது. உங்கள் எதிர்காலமும், நம் தேசத்தின் எதிர்காலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது.

நம் நாட்டின் வளமான கலாசாரத்தையும், பண்பாடுகளையும் மாணவர்கள் நினைவுகூர்வதோடு அதை பாதுகாக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை தலை சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. இது, ஊரகப்பகுதி, நகரப்பகுதி என்ற வேறுபாடுகளை சரி செய்ய வழிவகை செய்யும். இவ்வாறு, வெங்கையா நாயுடு பேசினார்.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித், பள்ளி தலைமையாசிரியர் பிரபாகரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!