கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி
பாலசோர்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கடற்படைக்கான கப்பல் எதிர்ப்பு ஏவுகணை இன்று(மே 18) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
ஏவுகணை தொழில்நுட்பத்தில் தன்னிறைவை அடைவதற்கான முயற்சியில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று காலை 8:50க்கு ஒடிசாவின் பாலசோர் கடற்பரப்பில் 'சீக்கிங் 42பி நாவல் ஹெலிகாப்டரில்' இருந்து இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
கடற்படை ஹெலிகாப்டருக்காக உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணையில் புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சோதனையில் அதிநவீன ஏவுகணை வழிகாட்டுதல் அமைப்பின் மூலமாக அதிநவீன வழிச்செலுத்துதல் அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த ஏவியானிக்ஸ் பயன்படுத்தப்பட்டது. இச்சோதனையை இந்திய கடற்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் இடம்பெற்றனர். இந்த ஏவுகணை தொழில்நுட்பம் இந்திய கடற்படையின் தாக்குதல் திறனை வலுப்படுத்தும்.

வாசகர் கருத்து (4)
கப்பல் எதிர்ப்பு சோதனை வெற்றிபெற்றதற்கு பாராட்டுக்கள். உள்நாட்டிலேயே இதுபோன்ற தயாரிப்புக்களை திறம்பட உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.
யாரை பாதுகாக்க?.....தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் கப்பலில் வந்துதான் சுட்டு கொள்கிறார்கள்.....
வெரிகுட்
....