Load Image
dinamalar telegram
Advertisement

திராவிட மாடலில் இது சகஜம்!

Tamil News
ADVERTISEMENT
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சி கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த தலைவர் இல்லாமல்லி தலைமையில் நடந்தது. தலைவரின் மகன் சுகுமார், கவுன்சிலராக இல்லாத போதிலும், 'ஆக்டிங்' தலைவராக பேரூராட்சி கூட்டத்தில் பங்கேற்றார்.


கூட்டத்தில், 15வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் முகமது இஸ்மாயில் பேசுகையில், 'ராஜவீதி குறுக்கு தெருவில், சாலை அமைக்க வேண்டும்' என்றார். செயல் அலுவலர் பிரேமா, 'வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றியதும், சாலை அமைக்கப்படும்' என, பதிலளித்தார்.

அப்போது பேசிய சுகுமார், 'வார்டுக்கு தேவையான வேலைகளை, என்னிடம் அறையில் எழுதிக் கொடுத்து விட்டு, இங்கு கூட்டத்திலும் பேசலாமா?' என்று, இஸ்மாயிலிடம் கேட்டார்.

இளம் நிருபர் ஒருவர், 'தலைவரம்மாவுக்கு மகன், 'வாய்ஸ்' கொடுக்கறாரு... அவங்க பேச மாட்டாங்களா?' என அப்பாவியாய் கேட்க, மூத்த நிருபர் ஒருவர், 'இந்த திராவிட மாடல் அரசில், இதெல்லாம் சகஜம்...' என 'கமென்ட்' அடிக்க, அனைவரும் சிரித்தனர்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    முதல்வரே பாவம் நிழலாகத்தானே இருக்கிறார் மகன் விண்ணப்பம் வாங்குவது, ஏனைய 'வாங்குவது' எல்லாம் கவனிப்பார். அம்மா சும்மா …..😀

  • sethusubramaniam - chennai,இந்தியா

    பல்வேறு பணிகளுக்கிடையில் , முதல்வருக்கு செய்தித்தாள் படிக்க நேரமில்லை. அவரது செயலாளர்களுக்கு இதையெல்லாம் அவரது கவனத்துக்கு கொண்டுபோக தோன்றுவதில்லை. அதனாலேதான் இன்னும் முதல்வர் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க முடியலை. பாவம் .

Advertisement